பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவடுதுறை வாசம் 135

பாம்பன் சுவாமிகள்

சென்னையில் குமரகுரு தாச சுவாமிகள் இருந்துவந்தார். அவரைப் பாம்பன் சுவாமிகள் என்பார்கள். அவர் முருகனிடம் இடையருத அன்பு உடையவர். ஆசிரியப்பெருமானிடம் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.

சென்னை இராயப்பேட்டையில் பூரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை என்ற சபை ஒன்று உண்டு. அதன் 17-ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்கு ஆசிரியப்பெருமான் தலைமை வகிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். ஆசிரியப் பெருமானும் தலைமை தாங்கி நடத்தினர். ஒருநாள் வைபவத்திற்கு பூரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் தலைமை தாங்கினர். அப்போது ஆசிரியருடன் அவர் வெகு நேரம் கலந்து உரையாடினர். ஆசிரியர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை மிகவும் பாராட்டினர். அவர் பல நூல்களே இயற்றியிருக்கிரு.ர். அவருடைய சமாதி திருவான்மியூரில் இருக்கிறது. இந்தச் சமாதிக் கோயிலுக்கு வடபால் டாக்டர் ஐயரவர்கள் நூல் நிலையம் அமைந்துள்ளது.

சீவகசிந்தாமணியின் 3-ஆம் பதிப்பு வேலே தொடங்கப் பெற்று நடந்து வந்தது. அப்போது உடன் இருந்து உதவி செய்து வந்தவர்கள் ஏதோ காரணத்தினுல் விலகிவிட்டார்கள். அதனல் தனியாகவே ஆசிரியர் அந்தப் பதிப்புப் பணிகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதில் புதிய பகுதிகளை மிகுதியாக அமைத் திருக்கிருர். 1922-ஆம் ஆண்டு அந்தப் பதிப்பு நிறைவேறியது. 'கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவன்' என்றும், அலஹாய சூரன் என்றும் இராமபிரானச் சொல்வார்கள். ஆசிரியப்பிரானும் யாருடைய துணையும் இன்றிச் சீவக சிந்தாமணியின் மூன்ரும் பதிப்பை வெளியிட்டு மகிழ்ந்தார்.

மூச்சுள்ளவரை

தஞ்சாவூரில் சீநிவாச பிள்ளே என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் நல்ல தமிழ்ப்புலமை உடையவர். தமிழ் வரலாறு' என்கிற வரலாற்று நூலே எழுதியிருக்கிரு.ர். அவர் 22-4-83-இல் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இதுவரை ஆசிரியப்பெருமான் செய்திருக்கும் தமிழ்ப் பணியைப் பாராட்டிவிட்டு, இன்றுவரை தமிழுக்காகத் தாங்கள் பாடுபட்டது போதுமே; இனி அந்தச் சிரமமான வேலையை அடியோடு நீக்கிவிட்டு, ஈசுவர பக்தியை அபிவிருத்தி செய்து