பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 என் ஆசிரியப்பிரான்

கொண்டு முன்னேர்களுக்கும் திருப்தியளிக்கச் செய்யலாமே' என்று எழுதியிருந்தார். ஆசிரியப்பெருமான் மிக்க வருத்தத்துடன் இந்த வேலைகளைக் கவனிக்கிருர் என்ற இரக்கம் அவருக்கு இருந்தது. ஆனல் ஆசிரியப்பெருமானுக்குத் தமிழ்ப் பணியே மூச்சாக இருந்தது. அதை நிறுத்திவிட்டால் அவர் வாழ்வும் நின்று விடும் என்பதை அந்தப் பெரியவர் உணரவில்லை.

இருந்தமிழே உன்னல் இருந்தேன்’

என்பதாகத் தமிழ்விடு தூதுக்காரர் குறிப்பிட்டதுபோல, தமிழ் ஆராய்ச்சியையே தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர் ஆசிரியப்பெருமான்.

எனவே சீநிவாச பிள்ளைக்கு ஆசிரியப்பெருமான், என் வாழ்நாள் முடியும்வரை, என் உடலில் சிறிதேனும் பலம் உள்ள வரை, நான் தமிழாராய்ச்சி ஒள்றில்தான் ஈடுபட முடியும். என்னை மூச்சு விடாதே என்று ஒருவர் சொன்னலும் அப்படியே செய்ய முயல்வேன். ஆனல் தமிழ்ப்பணியை நிறுத்திவிடு என்ருல் அது என்னல் முடியாத காரியம். நீங்கள் நல்ல நோக்கத்துடன்தான் எனக்கு எழுதினரீர்கள். எனக்குச் சிரமமாக இருக்குமேயென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். எனக்கு அதுவே இன்பம். நான் மேற் கொண்ட தமிழ் ஆராய்ச்சிப் பணியே எனக்கு மிக உயர்ந்த மோட்ச சாதனம்' என்று பதில் எழுதி அனுப்பினர்.