பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பெருங்கதை

பெருங்கதைப்பதிப்பு

கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை மிகச் சிறந்த காப்பியமாகும். ஆனல் அதற்கு ஒரு சுவடியே கிடைத்தது. ஆதியும், அந்தமும் இல்லாத பிரதி அது. அதில் இல்லாத பகுதிகள் வேறு ஏதேனும் சுவடியில் கிடைக்குமோ என்று ஆசிரியர் பல காலம் தேடி வந்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. ஆதியந்தம் இல்லாத கடவுளேப் போல அது இருந்தது.

இலக்கணக் கொத்து என்னும் நூலின் உரையில் அதன் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர் ஓரிடத்தில், மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம். அன்றியும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற்கு அலந்து இருந்து அருமைத் திருக்கையால் எழுதினர். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்கு வேள் மாக்கதை முதலியவற்ருேடு சேர்த்து அச்செய்யுட்களோடு ஒன்ருக்குவர்!’ என்று எழுதியிருக்கிருர். அதைப் படித்த போது ஆசிரியர் கொங்குவேள் மாக்கதை’ என்பது இராமாயணக்கதை முதலியவற்றைப் போலவே அதுவும் கொங்குவேள் என்னும் ஒருவனுடைய கதையாக இருத்தல் கூடும் என்று எண்ணினர். திருநெல்வேலியில் இருந்த கவிராஜ நெல்லையப்பப்பிள்ளை, கவிராஜ ஈசுவர மூர்த்தி பிள்ளை ஆகியவர்கள் வீட்டில் இருந்த ஏட்டுப் பிரதிகளைப் பார்த்துக்கொண்டு வந்த போது, கொங்குவேன் மாக்கதை என்று ஒரு சீட்டில் மேலே எழுதியிருந்த பழஞ்சுவடியைக் கண்டார். அதைப் பார்த்தவுடன் இலக்கணக் கொத்து ஆசிரியர் எழுதியிருந்த 'கொங்குவேள் மாக்கதை’ என்பது நினைவுக்கு வந்தது. அதை வாங்கி வைத்துக் கொண்டார். அதில் முதலில் 80 ஏடுகள் காணப்படவில்லை. 319-ஆம் ஏட்டிற்கு மேலே உள்ள ஏடுகள் இல்லை சாமிநாத தேசிகர் வெறுத்துக் கூறியது நினைவுக்கு வந்தது. அவர் வைதது இந்நூலுக்கு வாழ்த்தாக முடிந்தது. பெரியோர்களால் செய்யப்படும் அவமதிப்பும் கெளரவ முடையதாகும் என்பது திண்ணம் என்று ஆசிரியர் கருதினர். பெருங்கதை முகவுரையில் அதைக் காணலாம். -

சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார், முந்து நூல்களில் காப்பியம் என்னும் வடமொழிப் பெயர் இன்றேனும்,