பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் அதிகாரியின் செயல் 3.

என்பது ஒன்று. அதைப்பற்றிப் பல நூல்கள் தமிழில் இருக்கின்றன: வடமொழியிலும் இருக்கின்றன. பெண்களுடைய வருணனை கூடாது என்று சொன்னல் எத்தகைய இலக்கியத்தையும் படிக்க முடியாது. நான் மிகப் பழைய நூல்களாகிய சங்க நூல்களே வெளியிட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழ்நாடு எ ன க் கு க் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அந்த நூல்களிலும்கூடப் பெண்களின் வருணனை இருக்கிறது. ஆனால் அவற்றைப் படிக்கிற போது ஆபாச உணர்ச்சி தோன்ருது: இலக்கியச் சுவைதான் தெரியும். தாங்கள் இவற்றை எல்லாம் பொசுக்க வேண்டும் என்று நினைப்பதாகச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிரு.ர்கள். அப்படியானல் சங்க நூல்களை எல்லாம் கடலில் போட வேண்டியதுதான்; காவியங்களை எல்லாம் பொசுக்கிவிட வேண்டியதுதான். வட மொழியில் உள்ள நூல்களில் கூட அத்தகைய வருணனைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் யாரும் படிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டியிருக்கும். இப்படிப் பார்த்துக் கொண்டே போனல், பிறகு தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு ஒன்றுமே அகப்படாது' என்ருர். ஆசிரியர். -

"அப்படியா ? தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களுமே ஆபாசம் என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது?" என்ருர் ஜெயசிங்.

“ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி என்பது வேறு. மனித வாழ்க்கையில் காதல் என்பது மிக முக்கியமான உணர்ச்சி; காவியங்களும், சாஸ்திரங்களும் இந்தக் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. கடவுளைப் பாடுகிறவர்கள்கூட ஆண்டவனைக் காதலனுகவும் தங்களைக் காதலிகளாகவும் வைத்துப் பாடியிருக் கிரு.ர்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்'.

"அப்படியா ? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா ?' என்று கேட்டார் ஜெயசிங்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் ஆகிய எல்லா வற்றிலும் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றிப் பாடியிருக்கிருர்கள். எல்லி செட்டி லக்க ஏக லக்கா என்றபடி பெண் வருணனை வருவதல்ை ஆபாசம் என்று இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டால் தமிழுக்குத் தேவாரம் கிடைக்காது; திவ்யப்பிரபந்தம் கிடைக்காது."

"அப்படியா? இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறதே!'