பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 என் ஆசிரியப்பிரான்

'கூத்தியர் இருக்கையும் சுற்றிய தாகக் காப்பிய வாசனை கலந்தவை: சொல்லி’ என இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச் சங்கத்துத் தொல்காப்பியர் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனரும் தொல்காப்பியனரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும் வெள்ளுர்க்காப்பியனரும் சிறுபாண்டரங்களுரும் மதுரையாசிரியர் மாறனரும் துவரைக்கோமானும் கீரந்தையாரும் என்று இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் தம்மாற் பாடப்பட்ட கலியும் குருகும் வெண்டாளி யும் முதலிய செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்த உதயணன் கதையுள்ளும், கருதுவதங் கொன்றுண்டோகாப்பியக் கவிகள் காம, எரியெழ விகற்பித்திட்டார்’ எனச் சிந்தாமணியுள்ளும், நாடகக் காப்பிய நன்னுரல் நுனிப்போர்’ என மணிமேகலையுள்ளும் பிறவற் றுள்ளும் கூறினமையாலும், சொற்ருெடர் நிலை, பொருட்டொடர் நிலை என்ற தொடர்நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென உணர்க' என்று ஒரிடத்தில் எழுதி யுள்ளார். அப்பகுதியில் அவர் காட்டியுள்ள, கூத்தியர் இருக்கையும் ...சொல்வி என்னும் மேற்கோள் அப்புத்தகத்தில் இருப்பதைக் கண்டார். அதிலிருந்து அந்த நூல் உதயணன் கதை என்று தெரிய வந்தது. அந்த உரையில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களும், பெருங்கதையென்றும் கதையென்றும் வந்தவற்றில் பலவும் அப் புத்தகத்தில் இருக்கக் கண்டு அந்த நூலுக்கு அப்பெயர்கள் எல்லாம் உரியன என்று தெரிய வந்தது. அப்பால் அதைப் படித்துப் பார்த்தார் ஆசிரியர். -

பிறகு திருநெல்வேலியிலுள்ள வண்ணுர்பேட்டையில் வாழ்ந்த திருப்பாற்கடல்நாத கவிராயரவர்களுடைய வீட்டில் இருந்த ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பார்த்தபோது, பெருங்கதைப் பிரதி ஒன்று கிடைத்தது. அது எல்லா வகையிலும் முன் பெற்ற பிரதி யைப் போலவே இருந்தது.

பிறகு பல இடங்களில் முயன்று தேடிப் பார்த்தும் வேறு பிரதி கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரம், மணிமேகலைப் பதிப்புக்களில் அந்நூலிலிருந்து சில பகுதிகளை ஒப்புமையாகக் காட்டியிருந்தார் ஆசிரியர். அதைக் கண்ட பலர் பெருங்கதையில் பல கதைகள் இருக்கக்கூடுமென்று கருதிச் சில கதைகளை எழுதியனுப்ப வேண்டுமென்று எழுதினர். அவற்றைப் புது நடையில் எழுதிப் பாடபுத்தகங்களாக வைத்து நலம் பெறலாமென்பது அவர்களுடைய நோக்கம். "அவர்களுக்கு