பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்கதை 139,

விடை எழுதுவதிலும் சந்தித்த போதெல்லாம் சமாதானம்' கூறுவதிலும் எனக்கு உண்டான துன்பமும் காலப் போக்கும். இதில் எழுதி அடங்குவன அல்ல என்று ஆசிரியப்பிரானே எழுதி ujeitarrrrrr,

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நான்காம் ஆண்டு விழா நடந்தது. அதில் அவைத் தலைமை தாங்கிய ராவ்பகதூர் ம. வி. கனகசபைப் பிள்ளை தாம் அந்த ஆண்டு ஏதேனும் புதிய விஷயம் ஒன்றைப் பேச எண்ணினர். பெருங்கதை என்னும் பொருள் பற்றிப் பேச நினைந்து, பெருங்கதைப் பிரதி ஒன்றை அனுப்பினல் வேண்டியவற்றைப் பார்த்து எழுதிக் கொண்டு திருப்பி அனுப்பி விடுகிறேன்’ என்று ஆசிரியருக்கு எழுதினர். அவ்வாறே ஆசிரியர் ஒரு கடிதப் பிரதியை அவருக்கு அனுப்பினர், அவர் தமிழ்ச் சங்கத்தில் அதைப் பற்றி விரிவுரை ஆற்றினர். கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

மது ரை யி வி ரு ந் து கனகசபைப் பிள்ளே வந்த பிறகு,

பெருங்கதைப் பிரதியை ஆசிரியர் கேட்டபோது அவர் தாம் வெருேரு பிரதிசெய்து கொண்டு கொடுத்து விடுவதாகச் சொன்னர். அப்படியே அவர் பிரதி செய்து கொண்டு வருகையில் திடீரென்று: காலமாகி விட்டார். ஆசிரியர் அவர் வீடு சென்று துக்கம் விசாரித்து விட்டு, தாம் அனுப்பிய பெருங்கதைப் பிரதியைக் கொடுக்கும்படி கேட்டார். எங்கே தேடியும் அது கிடைக்கவில்லை. அதில் செய்திருந்த குறிப்புக்கள் பயன்படாமற் போயின.

பெருங்கதைப் பிரதிகள் வெவ்வேறிடங்களில் இருப்பதாகப் பலர் சொன்ன செய்திகளைக் கேட்டு அங்கெல்லாம் சென்று தேடியும். ஒன்றும் கிடைக்கவில்லை. இப்படியே இன்னும் இந்நூலின் சம்பந்தமாக நிகழ்ந்த செய்திகளை எடுத்து எழுதுவதென்ருல் அதுவே ஒரு பெருங்கதையாகும் என்று ஆசிரியர் எழுதியிருக்கிரு.ர். ஒரே பிரதியை வைத்துக் கொண்டு ஆராய்ந்ததில் பல தொல்லைகள் உண்டாயின.

'பெருங்கதைஎங்கேஉன்தன் பேதையறி வெங்கே,

ஒருங்கதை ஆராய்க் துதவ-அருங்கல்வி வல்லையோ என்ருல் மறுமொழிகூ றற்கொன்றும் இல்லையே! என்செய்கேன் யான்'

என்று வருந்தினர். ஆசிரியப்பிரான் பெருங்கதையைப் பதிப்பிதி, திராவிட்டால் அந்த நூலும் இழந்த தமிழ்ச் செல்வங்களோடு மறைந்து போயிருக்கும். வழக்கமான அடிக்குறிப்புக்களோடும்.