பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

预40 என் ஆசிரியப்பிரான்

விரிந்த முகவுரையோடும் பெருங்கதையை 1924-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பெருங்கதையை வெளியிடுவதற்கு வடமொழியில் உள்ள பிரகத்சம்கிதா' என்ற காப்பியத்தைத் தக்கவர்களைக் கொண்டு, அதிலுள்ள கருத்துக்களைச் சேகரித்து அதை ஆராய்கிற போது, அது அபூர்த்தியாக இருக்கும்போது எப்படி அதைப் பதிப்பித்து முடிப்பது என்ற கவலை அதிகமாகவே உண்டாயிற்று. முழுவதுமாக இல்லாவிட்டாலும் குறையில்லை என்று அச்சிட முனைகிறபோது தான் முன்பு சொன்ன பல இன்னல்களும், சங்கடங்களும் உண்டாயின.

ஒரு நூலைப் பதிப்பிக்கும் போது அதை ஆராய்வதிலும் பொருள் காண்பதிலும் உண்டான தொல்லைகளோடு மற்றவர்களால் நேர்ந்த இன்னல்கள் பல. எல்லாவற்றையும் வென்று நூல்களே வெளியிட்ட தல்ை தமிழ்நாடு பாக்கியம் செய்ததாயிற்று.

பெருங்கதைப் பதிப்பு 18-2.1924-இல் வெளியாயிற்று. இந்தப் பதிப்பு வேலை ஆசிரியப்பெருமானுக்குப் பல வகையான சங்கடங் களைக் கொடுத்ததனுல் அது நிறைவேறியவுடன், செய்வினை முடித்த செம்மல் உள்ளம்” என்றபடி மிக்க இன்பம் உண்டாயிற்று. அதன் பிறகு சில தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்து கொண்டு வந்தார்.

பெருங்கதைப் பதிப்பு வேலை ஐந்தாண்டுக் காலம் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியப் பிரான் செலவழித்தது இல்லை. இடையிடையே பல தடைகள் உண்டானது தான் இந்தக் கால தாமதத்துக்குக் காரணம். இந்தப் பெருங் கதைப் பதிப்பைத் தம் ஆசிரியருக்கு உரிமையாக்கி ஒருபாடலே அமைத்தார்.

" உரமலி திரிசி ராமலை புதித்த வெரருமணி ஆவடு துறையாம்

புரமலி மடத்தில் இயற்றமிழ்க் குரவு புனமணி பலதமிழ் நூல்செய் வரமலி புகழ்மீ ட்ைசிசுக் தரநாவலர்மணிக் கென்குரு மணிக்குத் திரமலி சுவைசால் பெருங்கதைப் பதிப்பைத் திகழ்வுற வுரிமையாக்

- குவனே'