பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. சிதம்பர வாழ்க்கை

தமிழ்க் கல்லூரித் தலைவர் ஆனது

1924-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்னமலை செட்டியார் ஒரு தமிழ்க் கல்லூரியையும், ஒரு வடமொழிக் கல்லூரியையும் தொடங்க எண்ணினர். மீட்ைசி தமிழ்க் கல்லூரி, மீட்ைசி வடமொழிக் கல்லூரி, மீட்ைசி கலைக்கல்லூரி என்று மூன்று கல்லூரிகளேத் தொடங்கினர். தமிழ்க் கல்லூரிசகுத் தக்க ஒருவரை. முதல்வராக நியமிக்க வேண்டுமென்று எண்ணியபோது ஆசிரியப் பெருமான் நினைவே அவருக்கு வந்தது. இது சம்பந்தமாகச் சிலரை ஆசிரியப்பெருமானிடம் அனுப்பி ஆசிரியரை எப்படி யாவது அந்தப் பதவியை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று. வற்புறுத்திச் சொல்லச் சொன்னர். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று. ஆர். எஸ். ஐயர் என்பவரையும் அழைத்துக் கொண்டு ராஜா அண்ணுமலை செட்டியார் அவர்களே தியாகராஜ விலாசத்திற்கு வந்தார். நடராசப் பெருமானைத் தினந்தோறும் சென்று வழிபட இதனால் வாய்ப்புக் கிடைக்கிறதே என்கிற நினைவில்ை அப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஆசிரியப்பெருமானும் அவர்களது வற்புறுத்தலுக்கு இணங்கினர். சிதம்பரத்திலுள்ள தீட்சிதர்களோ, ஆசிரியப்பெருமான் அங்கே வருவது அறிந்து, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியப் பெருமான் சிதம்பரத் திற்குப் புறப்பட்டுச் சென்ருர். தெற்கு ரத வீதியில் ஒரிடத்தில் அவர் தங்குவதற்குரிய வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார்கள்: மீனாட்சி தமிழ்க்கல்லூரி, ஆசிரியர் தங்கியிருந்த இல்லத்திலேயே ஆரம்பமாகியது. முன் குறிப்பிட்டுள்ள கோதண்டராமையர். என்கிற மாணவர் அவருக்கு உதவியாக இருந்தார். சமையலுக்கு ஒருவரை நியமித்துக் கொண்டார். அப்போது மீட்ைசி கலைக் கல்லூரி முதல்வராக வரலாற்று வித்தகராகிய நீலகண்ட சாஸ்திரியார் இருந்தார். அவரும் ஆசிரியப்பெருமானுக்கு வேண்டிய வசதிகளேச் செய்து தந்தார். ஆசிரியப்பெருமானுக்கு அடுத்தபடி திரு பொன்ைேதுவார் என்பவர் தமிழ்க்கல்லூரி ஆசிரியர் ஆனர். o *

ஒரியண்டல் மகாநாடு 1924-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி முதல். 24-ஆம் தேதி வரையில் 3-ஆவது ஒரியண்டல் மகாநாடு சென்னையில்,