பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'i 42 என் ஆசிரியப்பிரான்

செனெட் மண்டபத்தில் நடைபெற்றது. அலகாபாத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கங்காநாத் ஜா தலைமை வகித்தார். சிதம்பரத்திலிருந்து ஆசிரியப்பெருமானே அந்த மகாநாட் டிற்கு வரவேண்டுமென்று தலைவர்கள் அழைத்தார்கள். அப்படியே ஆசிரியப் பெருமான் சென்னைக்கு வந்து ஒரு வாரம் தங்கி மகாநாட்டில் கலந்து கொண்டு சில பயனுள்ள யோசனைகளைத் தெரிவித்தார். மகாநாடு நிறைவேறிய பிறகு சிதம்பரம் சென்ருர்,

திருவிடைவாயில் திருப்பதிகம்

ஆசிரியப்பெருமானிடம் கல்லூரியில் படித்தவர் டி. ஜி. ஆராவமுத ஐயங்கார் என்பவர். அவர் சில காலம் ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருந்தார். பின்னர் வக்கீல் தொழில் செய்தார். அவருக்குக் கல்வெட்டுப் பரிசோதனையில் நல்ல பயிற்சி உண்டு,

கொரடாச்சேரிக்கு அடுத்த திருவிடைவாயில் சிவபெருமான் ஆலயத்தில் ஒரு கல்வெட்டில் தேவாரப் பதிகம் ஒன்று இருந்ததை அவர் கண்டு பிடித்தார். அந்தத் தேவாரம் வழக்கத்தில் இருந்த பதிப்பில் காணப்பெறவில்லை. அவர் அந்தப் பதிகத்தைப் பிரதி எடுத்துக்கொண்டு வந்து ஆசிரியப்பெருமானிடம் காட்டினர். அவர் அதைத் திருத்திக் கொடுக்க, பின்பு அதனை வெளியிட்டார். அதுவரைக்கும் தெரியாதிருந்த அந்தப் பதிகம் பிறகு எல்லோரும் படித்துப் பாராயணம் செய்யும்படியாக அமைந்தது. நம்பியாண் டார் நம்பிதேவாரப் பதிகங்களே வரையறை செய்து திருமுறை களாக வகுத்தபோது கிடைக்காத அந்தப் பதிகம் கிடைத்ததை அறிந்த அன்பர்கள் மகிழ்ந்தனர். மறைந்து போன பல தேவாரப் பதிகங்களில் சிலவேனும் இவ்வாறு கிடைத்தால் எவ்வளவு நன்முக இருக்கும் என்று ஆசிரியரும் பிறரும் எண்ணினர்கள்.

பொற்கிழியும் பட்டமும் பெற்றது

1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி அன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 84-வது ஆண்டு விழா நடந்தது. அதற்கு ஸர் சி. பி. இராமசாமி ஐயர் தலைமை தாங்கினர். ஒரு வாரத்திற்கு முன்பே ஆசிரியப் பெருமான் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு மதுரையை அடைந்தார்.

ஆசிரியப்பெருமான் செய்துவரும் தமிழ்த் தொண்டுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று மதுரையில் வக்கீலாக இருந்த டி. வி. சீநிவாசையங்கார் எண்ணினர். மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் அவர் அப்போது இருந்தார். அந்த விழாவில்