பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர வாழ்க்கை 143

நிேவாசையங்கார் தாம் பலரிடம் தொகுத்து சட்டிய பொற்கிழியை ஆசிரியப் பெருமானுக்கு வழங்கினர்.

தமக்கு நலம் செய்தவர்களையெல்லாம் மறவாமல் நன்றி பாராட்டும் இயல்புடையவர் ஆசிரியர். அப்போது பொற்கிழி வழங்கினவர்கள் பெயர்களே எல்லாம் தாம் பதிப்பித்த நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரைப் பதிப்பில் ஆசிரியப் பெருமான் சேர்த் திருக்கிரு.ர். அந்தப் பதிப்பு 1925-ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. அதன் முகவுரையில் 8-5-25 இல் பொற்கிழி அளித்து உதவிய மகோபகாரிகளின் பெயர்கள்’ என்ற தலைப்பில் உதவி செய்தவர்களின் பெயர்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக் இன்றன,

அவ்விழாவில் காஞ்சிகாமகோடி பீடத்து பூரீமத் சங்கராசார்ய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிக் கெளரவித்தார்கள். மேலும் ஆசிரியப்பெருமானுக்கு, *தாrதினத்ய கலாநிதி' என்னும் பட்டத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார்கள். பெருந்தவ முனிவராகிய அப்பெருமான் அருளிய அந்தப் பட்டத்தைப் பொன்னேபோற் போற்றித் தம் பதிப்பில் தம் பெயருடன் சேர்த்து வெளியிட்டார்.

தக்கயாகப் பரணி

சிதம்பரத்தில் ஆசிரியர் இருந்த காலத்தில் கல்லூரியில் பாடம் சொல்லுகிற நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகப் பதிப்பு வேஜலகளிலும்,நூலாராய்ச்சியிலும் இடைவிடாது கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாகத் தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்க வேண்டு மென்று அதை ஆராய்ச்சி செய்து வந்தார். ஒட்டக்கூத்தர் இயற்றிய அந்த நூலேக் காட்டிலும் அதன் உரை சிறப்பாக அமைந்திருந்தமை யிஞல், அந்த உரையின் பதிப்பு வெளிவந்தால் தமிழ் மக்களுக்கு மிகவும் நலமாக இருக்குமென்று எண்ணினர். அதற்கு வேண்டிய குறிப்புக்களைத் தொகுத்திருந்தார். -

அப்போது ஒரு புலவர் ஆசிரியரிடம் வந்து தாம் தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்க விரும்புவதாகவும், ஆசிரியரிடம் இருக்கும் பிரதியையும், குறிப்புக்களையும் கொடுத்துதவ வேண்டுமென்றும் வற்புறுத்தினர். -

பல காலமாகத் தாம் ஆராய்ந்து வந்த அந்த நூலைத் தாமே வெளியிட வேண்டுமென்று ஆசிரியப்பெருமான் எண்ணியிருந்தார். பல முறை அந்தப் புலவர் வந்து வற்புறுத்தவே, ஒரு நாள் அவரிடம்,