பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 என் ஆசிரியப்பிரான்

'நானே இறைவன் திருவருளால் அதை விரைவில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். என் ஆயுட்காலத்தில் அது முடியாது போகு மாயின் இந்தக் கையெழுத்துப் பிரதியையும், நான் தொகுத்து வைத்திருக்கும் ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் தங்களிடமே கொடுக்கும்படி ஏற்பாடு செய்கிறேன்' என்று சொன்னர். 'அப்படி ஒன்றும் நேரவேண்டாம். தாங்களே அதைப் பதிப்பி யுங்கள்’ என்று சொல்லிப் போய்விட்டார் அவர். தமிழ் நூல்களை ஆசிரியப்பிரான் பதிப்பித்ததனல் புகழும்பொருளும் பெற்ருரென்று எண்ணிப் பலர் சில தமிழ் நூல்களைப் பதிப்பிக்க முயன்ருர்கள். அப்படி முயன்ற போது, அது எவ்வளவு சிரமமான காரியமென்று உணர்ந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள்.

புலவர்களுக்குப் பட்டம் வழங்கியது

1925-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்த சன்மார்க்க சபையின் 16-ஆவது ஆண்டு விழா மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல நடந்தது. ஆசிரியப்பெருமான் அவ்விழாவுக்குத் தலைமை தாங்கினர். இந்த விழாவில்தான் இராமநாதபுரம் சம்ஸ்தானத் தமிழ்ப்புலவர் ரா. ராகவையங்கார் அவர்களுக்கு 'மகாவித்துவான்' என்னும் பட்டமும், மகிபாலன்பட்டி. கதிரேசன் செட்டியார் அவர்களுக்குப் 'பண்டிதமணி’ என்ற பட்டமும் அளிக்கப்பெற்றன. அவர்கள் ஆசிரியப்பெருமான் அவர்களது திருக்கரத்தினல் அந்தப்பட்டங்களைப் பெற்றதற்கு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். தக்கவர் களுக்கு ஏற்ற வகையில் சிறப்புச் செய்ய வேண்டுமென்றும் அவர்கள் புகழை உலகம் அறியச் செய்ய வேண்டுமென்றும் கூறி வாழ்த் தினர் ஆசிரியர்.

கவர்னர் கோஷன் வருகை

1926-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னைக் கவர்னர் கோஷன் துரை சிதம்பரத்திற்கு விஜயம் செய்தார். அப்போது மீனட்சி காலேஜைச் சார்ந்த ஒரு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரை வரவேற்பதற்கு ஒரு பாடல் வேண்டுமென்று உள்ளுர்க்காரர்கள் விரும்பினர்கள். சர்க்கரைப் புலவரிடம் சொல்லி ஒரு பாடலை எழுதச் சொன்னர்கள். அவர் தமிழ் மரபுப்படி கவர்னருடைய மனைவியைப் பாராட்டியிருந்தார். அதில் அந்தப் பெருமாட்டியின் நகிலச் சிறப்பித்துப் பாடியிருந் தார். இந்தக் காலத்திற்கு அத்தகைய வருணனை ஏற்றதன்று என்று சொல்லி ஆசிரியப்பெருமானே ஒர் அகவற்பா இயற்றி வரவேற்புப் பத்திரத்தை எழுதி வாசித்தார். -