பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர வாழ்க்கை 145

பாடற் கடிதங்கள்

7-1-1927 அன்று பெரும்பண்ணேயூர் ஏ. எம். பெரியசாமி முத்தைய உடையார் என்பவர், 'தமிழ்த் தெய்வத்திற்கு அர்ப் பணம்’ என்று ஒரு தொகையை ஆசிரியப் பெருமானுக்கு அனுப்பி வைத்து, ஒரு வெண்பாவையும் எழுதி அனுப்பினர்.

  • அன்னையினும் மிக்கதிக அன்புள்ள அத்தாலே

கின்னேவந்து தோத்தரிக்க நேடினேன் - அன்னதற்கு மாற்றங்கள் மிக்குண்டு; மானிடர்கள் செய்கையல்ல; சாற்றினே னுண்மையைத் தான், அதற்கு விடையாக ஆசிரியப் பெருமான்,

"கரும்பன்றி யமுதமும்நேர் தமிழ்நயத்தை அறிந்துவந்து காத்தோம்

பறகண பெரும்பன்றி யூர்ப்பெரிய சாமிமகி பாலனைநேர் பெற்றி யோர்யார்? சுரும்பன்றி மலர்த்தேனின் சுவையறியும் பொருளுளதோ? துனைந்தன்

குன்சீர் விரும்பன்றி யொருசிறிதுங் கவலையடை யேல்நெஞ்சே விளம்பி

னேனே." .

'தக்கமுக மலர்ச்சியுடன் உபசரிப்பார்; மிகப்புகழ்வார் சாt என்பார்; அக்ககிகர்தமிழ்க்குழைப்பார் உனைப்போல இலையென்னஅறைவா ரன்றி இக்கலியிற் பெரும்பன்றி யூர்ப்பெரிய சாமிமுகில் என்ன நாளும் மிக்கபொருள் அளித்தொன்றும் வேண்டாமல் தமிழ்புரப்பார் விளம்பில்

யாரே?? என்று இரண்டு பாடல்களை எழுதி அனுப்பினர்.

ஆசிரியப்பெருமான் இப்படிப் பலருக்கும் பல சமயம் செய்யுளா கவே கடிதங்களே எழுதியனுப்புவார்.

1827-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மீனட்சி தமிழ்க் கல்லூரியில் சேது சம்ஸ்தான வித்வான் ரா. ராகவை யங்கார், 'கம்பர் கூறும் பெண்பாவியல்பு' என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினர். அவ்விழாவிற்கு ஆசிரியப் பெருமான் தலைமை தாங்கினர். பெண்ணேச் சிறுமையாக எண்ணுவோர் உள்ள இந்தக் காலத்தில் இந்தச் சொற்பொழிவைக் கேட்டிருந்தால் தம் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று அவரைப் பாராட்டினர்.

3604–10