பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. சிதம்பரத்தை விட்டு நீங்குதல்

சில நாட்களாகவே ஆசிரியருக்கு உடல்நலம் சரியாக இல்லா மையில்ை சிதம்பரத்தை விட்டுப் போக வேண்டுமென்று எண்ணி இருந்தார். எனவே ரா. ராகவையங்கார் வந்தபோது அவ்ரையே மீனாட்சி கல்லூரி முதல்வராக வைத்துவிட்டுத் தாம் விலகிக் கொள்ளலாம் என்ற எண்ணம் வலிமையுடையதாயிற்று. ராகவையங்காரிடம் அந்தக் கருத்தைச் சொன்னபோது அவர் அதற்கு இணங்கவில்லை. மதுரையிலிருந்து சிதம்பரத்திற்கு வந்திருந்து வசித்தல் சாத்தியமில்லை என்று தெரிவித்து விட்டார். மதுரையில் இருந்தே தமிழ்ப் பணியாற்ற அவர் விரும்பினர்.

அதற்குப் பிறகு பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர் களுக்கு ஆசிரியப் பெருமான் எழுதி, சிதம்பரம் மீட்ைசி தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்து பணியாற்ற வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். அவர் அப்போதுதான் தம் ஊரில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அதை முடிக்காமல் வருவதற்கில்லை என்று அவரும் மறுத்துவிட்டார்.

ஆசிரியப் பெருமானுக்கு வயிற்றில் வலி உண்டாயிற்று. உணவு சரியாகச் சீரணம் ஆகவில்லை. அதனுல் சிதம்பரத்தை விட்டுச் சென்னைக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. தாம் மீளுட்சி கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலக விரும்புவதை அண்ணுமலை செட்டியாருக்குத் தெரிவித்தார். அப்போது அவர், 'உங்களுக்கு விருப்பம் உள்ள யாரையாவது நியமனம் செய்து விட்டு நீங்கள் விலகிக் கொள்ளலாம்' என்று சொன்னர்.

தம்முடன் பல காலமாகப் பழகியவரும்,தமக்கு அடுத்தபடியாக மீளுட்சி கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருமான திரு பொன்ைேதுவார் அவர்களேயே முதல்வராக நியமனம் செய்ய லாம் என்று ஆசிரியப் பெருமான் தெரிவித்தார். அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அவரையே சிதம்பரம் மீளுட்சி தமிழ்க்கல்லூரி முதல்வராக நியமித்தார்கள். ஆசிரியர் அவரிடம் தம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, சென்னே வந்து சேர்ந்தார்.

இழந்தவற்றை மீட்டுத் தந்தது

யாழ்ப்பாணத்தில் சாமிநாத பண்டிதர் என்ற ஒருவர் இருந் தார். அவர் திருமுறைகளே நல்ல முறையில் அச்சிட்டிருந்தார்.