பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரத்தை விட்டு நீங்குதல் 1 47

சில இடங்களில் பாடபேதங்களையும் கொடுத்திருந்தார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. என்ருலும் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து உள்ளது உள்ளபடியே பதிப்பித்திருந்தார்.

அவர் சிதம்பரத்திற்கு வரும்போதெல்லாம் ஆசிரியப்பெரு மானச் சந்தித்துப் பேசிவிட்டுப் போவது வழக்கம். அப்படி அவர் ஒரு சமயம் வந்தபோது தம்முடைய பண்டங்களை எல்லாம் ரெயிலில் இழந்து விட்டார். புத்தகங்களும், வேறு சில பண்டங்களும் பல காலமாகச் சேர்த்து வைத்தவை ஆதலின், அவற்றை இழந்ததனல் அவருக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று. ஆசிரியரைச் சந்தித்த போது அவர் முகம் வாட்டமுற்றிருந்தது. ஏன் ஒரு விதமாக இருக்கிறீர்கள்?' என்று ஆசிரியர் கேட்க, அவர் தாம் பண்டங்களே இழந்ததைச் சொன்னர்.

ஆசிரியப்பெருமான் உடனே ரெயில்வே ஸ்டேஷன் சென்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் ஒன்றைக் கொடுக்கச் செய்தார். தக்கபடி விசாரணை செய்யக் கேட்டுக் கொண்டு இழந்த பொருளை மீட்டுத் தர வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆசிரியரைக் கண்ட வுடன் அவருக்கு அவர்கள் காட்டிய மரியாதையையும், தக்க விசாரணை செய்ய உடனடியாக அங்கங்கே செய்தி அனுப்பி வைத்த தையும் கண்டு சாமிநாத பண்டிதர் வியந்தார். இரண்டொரு நாள்களில் அவர் இழந்த பொருள்கள் எல்லாம் கிடைத்துவிட்டன. அவர் மிக மிக மகிழ்ந்து, கற்ருேர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதை உங்களிடந்தான் கண்டேன்' என்று பாராட் டிாை.

நான் சிதம்பரத்தில் ஆசிரியரைத் தரிசித்தது

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு நான் வேதாந்த நூல்களைப் படித்து வந்தேன். அதல்ை துறவை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அக்காலத்தில் சேந்தமங்கலத்தில் பூரீ சுயம்பிரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி என்னும் அவதுரத சுவாமிகள் தத்தகிரி என்ற குன்றில் எழுந்தருளியிருந்தார். அவருடைய சீடர் களில் ஒருவராகிய சங்கரானந்தர் என்பவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். எந்தத் துறவி வந்தாலும் அவரைப் பார்த்துப் பழகும் இயல்பு என்னிடம் இருந்தது. சங்கரானந்தர் வந்திருந்த போது என்னுடைய விருப்பத்தைச் சொன்னேன். அவர் அப்படியே செய்யலாம் என்ருர்,

சேந்தமங்கலம் செல்ல வேண்டும் என்ற என் கருத்தை என் தாய் தந்தையரிடம் சொன்னபோது, அவர்கள் அதற்கு உடன்பட வில்லை. என்ருலும் எனக்குச் சேந்தமங்கலம் போய்ச் சுவாமிகளிடம்