பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 என் ஆசிரியப்பிரான்

“தாங்கள் இவற்றை யெல்லாம் நன்முக ஆராய்ந்து இருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். கிராமாந்தரங்களில் பெண் கள் கச்சு அணியாமல் வருகிருர்கள். காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள் அப்படித்தான் இன்னும் கூட நடமாடுகிருர்கள். அவர்களைக் கண்டு யாரும் தவருக எண்ணுவது இல்லை. பார்க்கிற வர்களுடைய கண்ணில் உள்ள தவறுதான் அவர்களைத் தவருகப் புரிந்து கொள்ளச் செய்கிறது.'

“தாங்கள் சொல்வது உண்மைதான்' என்று ஒருவாறு இறங்கி வந்தார் ஜெயசிங்.

'மற்ருெரு விஷயம். தாங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா ?' என்று கேட்டார் ஆசிரியப் பெருமான்.

'ஏன் போகாமல் ? நாள் தவருமல் கோவிலுக்குப் போவேன்; அர்ச்சனையும் பண்ணுவேன்' என்ருர் ஜெயசிங்.

"அங்கே உள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா ?'

'ஓ! பார்த்திருக்கிறேனே ! .

‘அங்கேயுள்ள சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் அவற்றைக் கண்டு பக்தர்கள் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவருன உணர்ச்சி உண்டாவ தில்லை. இது இன்று நேற்று வந்தது அன்று. பல காலமாக இருக்கிற, செய்தி. தாங்கள் சொல்கிறபடி திருப்புகழை, காவடிச் சிந்தை, அவற்றில் வருகிற பெண் வருணனைக்காக எரிக்கத் தொடங்கினல் தமிழ் இலக்கியங்களையும், வடமொழி இலக்கியங்களையும் கடலில் கொண்டுபோய்ப் போடவேண்டும்; கோவில்களில் உள்ள விக்கிரங் களை எல்லாம் உடைத்தெரிய வேண்டும்."

'ஐயா, ஐயா ! ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? நான் அந்தக் காரியத்தைச் செய்ய உடந்தையாக இருப்பேன ? எனக்கு இந்த விஷயம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் தாங்கள் எனக்கு இந்த உண்மையைச் சொன்னிர்கள். இந்த மாதிரியான விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் நான் எதையும் இனிச் செய்யத் துணியமாட்டேன். தங்களுக்கு மிகவும் நன்றி' என்ருர் ஜெயசிங். ஆசிரியர் வீட்டிற்குத் திரும்பும்போது, தம் வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார், அந்தப் போலீஸ் அதிகாரி.