பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 என் ஆசிரியப்பிரான்

துறவு பெற வேண்டும் என்ற விருப்பம் நீங்கவில்லை. ஆகவே ஒரு நாள் யாரிடமும் சொல்லாம்ல் ஊரிலிருந்து புறப்பட்டு விட்டேன். சேந்தமங்கலத்துக்கு நாமக்கல் வழியாகச் செல்ல வேண்டும். மோகனூரிலிருந்து சேந்தமங்கலம் 20 மைல் தூரம் இருக்கும். கால் நடையாகவே நடந்து ஒரு நாள் சேந்தமங்கலம் சென்று தத்தகிரியை அடைந்தேன். சுவாமிகளை வணங்கி, எனக்குச் சந்நியாசம் தர வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன். அப்போது எனக்குத் தம்பி பிறக்கவில்லை. என்னுடைய 20-ஆவது பிராயத்தில் தான் பிறந்தான்.

என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்ட சுவாமிகள், நான் என் குடும்பத்திற்கு ஒரு மகன் என்று அறிந்து, ஏகபுத் திர விஷயம் இது. உனக்குத் துறவு அளிக்க இயலாது' என்று சொல்லி விட்டார். :இங்கே ஏதேனும் பணி செய்து கொண்டிருக்கிறேன்' என்றேன். அதற்கும் அவர் உடன்படவில்லை. எனக்கு வேறு என்ன வழி?" என்று கேட்டேன். உபாசனை செய்’ என்ருர். அதுவே குரு உபதேசமாகக் கொண்டு அதுமுதல் முருகப்பெருமான வழிபடத் தொடங்கினேன். மோகனூருக்கு மீண்டு வந்துவிட்டேன். ஆயினும் சேந்தமங்கலத்துக்குப் போகும் எண்ணம் மட்டும் என் உள்ளத்தில் ஊன்றியிருந்தது.

சில காலம் கழித்து மோகனூரில் உள்ள காந்தமலை என்னும் குன்றில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் சந்நிதியில் அன்பு என்பது பற்றிப் பேசினேன். அதுதான் என்னுடைய முதற் சொற்பொழிவு. -

அதைக் கேட்கும் கூட்டத்தில் சேந்தமங்கலத்திலிருந்து வந்திருந்த கிச்சு உடையார் என்பவர் இருந்தார். என் பேச்சு முடிந்தவுடன் என்னை அணுகி, சேந்தமங்கலத்துக்கு வந்து சில பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் தமிழும் கற்பிக்க முடியுமா? உங்களுக்கு வேண்டிய செளகரியங்களெல்லாம் செய்து தருகிருேம் என்ருர். சேந்தமங்கலத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிக மகிழ்ந்தேன். முருகன்தான் இப்படி ஒரு வழி காட்டுகிருன் என்று நம்பினேன். ஆகவே கிச்சு உடையார் கூறியதற்கு ஒப்புக் கொண்டேன். ஒரு வேலையை மேற்கொண்டு செல்வதை அறிந்து என் தாய் தந்தையர் மறுப்புக் கூறவில்லை.

ஒரு நாள் நான் சேந்தமங்கலம் போய்ச் சேர்ந்தேன். அந்த ஊர் மிட்டாதார் ஐராவத உடையார் என்பவர் மிக்க செல்வாக்கு உடையவர். மல்லிகைச் செடிகள் சூழ்ந்த நந்தவனத்துக்கு நடுவில் தெய்விக ஆசிரமம் என்பதை அமைத்திருந்தார். யாரேனும்