பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரத்தை விட்டு நீங்குதல் 1 49

துறவியோ பெரியவரோ வந்தால் அங்கே தங்குவார்கள். அங்கே ஒரு புத்தக சாலையும் இருந்தது. நான் அப்போது பிரமசாரி. அங்கே நான் தங்கியிருந்தேன். -

சேந்தமங்கலத்துக்குச் சென்று சில பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் தமிழும் சொல்லிக் கொடுத்து வந்தேன். திருப்புகழ், கந்தர் அலங்காரம் ஆகியவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் செய்து வந்தேன். அடிக்கடி தத்தகிரி சென்று அவதூத சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் சேந்தமங்கலம் வந்தபோது அங்கே நிஜானந்த சரஸ்வதி என்கிற துறவி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவரைக் காசி சுவாமிகள் என்றும் அழைப்பர். காசியில் சில காலம் இருந்தவர். அந்த ஆசிரமத்தில் அவருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. -

நான் தமிழ்நூல்கள் பலவற்றைக் கற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் பாடமாக இருந்த சில கம்பராமாயணச் செய்யுட்களையும் பிறவற் றையும் கூர்ந்து படித்திருந்தேன். அவற்றைப் பற்றிப் பேசுவேன். தமிழார்வம் மிகுதியாக இருந்தது. நான் அப்போது வெண்பா முதலிய செய்யுட்களை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தேன். என்னிடம் காசி சுவாமிகள் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவருக்கு ஆசிரியப் பெருமானே நன்ருகத் தெரியும். தம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிள்ளை சிதம்பரம் சென்று ஆசிரியரிடம் பாடம் கேட்டு முன்னுக்கு வந்த செய்தியைச் சொன்னர். நீங்களும் அவரிடம் சென்ருல் அவர்கள் உங்களை அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள். உங்களுடைய தமிழ் அறிவும் பெருகும்' என்று என்னிடம் சொன்னர். அவர் சொன்ன கருத்து என் உள்ளத்தில் ஊன்றி முளைத்து வளர்ந்தது. முருகப்பெருமான் திருவருள் இருந்தால் ஆசிரியப் பெருமானிடம் செல்லலாம் என்ற அவா எனக்கு உண்டாயிற்று.

சேந்தமங்கலம் மிட்டாதார் ஐராவத உடையார் என்பால் மிகவும் அன்பு உடையவர். அவர் பெரும்பாலும் என்னுடன் இருந்து என்னுடைய நன்மையைக் குறித்தே பேசுவார். நான் நன்முகச் சொற்பொழிவு ஆற்றுவதையும், செய்யுள் இயற்றுவதையும் கண்டு மிகவும் வியப்பு அடைவார். நான் மேலும் பல தமிழ் நூல்களைக் கற்றுப் பெரும் புலவராக வரவேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. என்பால் தாயன்பு உடையவராகிய அவர், காசி சுவாமிகள் நான் ஆசிரியர் அவர்களிடம் போகலாம் என்று சொன்னவுடன் அப்படியே செய்வதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.