பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. நான் ஐயரவர்களைத் தரிசித்தது

1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தைப்பூசம் வந்தது. ஐராவத உடையாரும், வேறு சிலரும் வடலூர்த் தைப்பூச விழா வுக்காக ஒரு காரில் புறப்பட்டோம். வடலூர் சென்று இராமலிங்க சுவாமிகள் நிறுவிய சபையைத் தரிசித்துவிட்டு, சிதம்பரம் சென்று ஆசிரியர் அவர்களைப் பார்க்கலாம் என்பது எங்கள் உத்தேசம்.

நான் சேந்தமங்கலம் செல்வதற்கு முன் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஒரு சமயம் ஒரு விழாவிற்குச் சேந்தமங்கலம் வந்திருந்தார்கள். அவரைப் பற்றித் தெரிந்தது முதல் எனக்கு அந்தச் சுவாமிகளிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று; என்ருலும் ஆசிரியப் பெருமானைப் பற்றிக் கேட்ட பிறகு ஆசிரியரிடமே போக வேண்டுமென்ற ஆசை மீதுார்ந் திருந்தது.

நாங்கள் எல்லோரும் வடலூர் சென்று தைப்பூசத்தைத் தரிசித் துக் கொண்டு அப்படியே சிதம்பரம் சென்ருேம். அப்போது ஆசிரி யர் சிதம்பரம் மீனுட்சி தமிழ் கல்லூரியில் இருந்தார். சிதம்பரத்தில் ஆசிரியரிடம் தமிழ் பயிலும் நடேச முதலியார், ஆறுமுக முதலிய்ார் ஆகிய இருவரையும் எங்களுடன் வந்த கிச்சு உடையாருக்குத் தெரியும். எனவே நாங்கள் அவர்களுடன் ஆசிரியப் பெருமான் தங்கியியிருக்கும் இல்லத்தை அறிந்து கொண்டு அங்கே சென்ருேம்.

அந்த வீட்டுத் திண்ணையில் நாகப்ப செட்டியார் என்பவர் அமர்ந்திருந்தார். நான் ஆசிரியர் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகையால் அவரையே ஆசிரியப் பெருமான் என்று நினைந்து மிக்க பணிவுடன் நெருங்கினேன். ஆசிரியப் பெருமான் உள்ளே இருக்கிரு.ர்கள்' என்று அவர் சொல்லவே, நாங்கள் உள்ளே போனுேம்.

காரில் நாங்கள் ஐத்தாறு பேர்களாகப் போனதால், எங்கே இவ்வளவு பேர்களும் வந்திருக்கிறீர்கள் ?’ என்று விசாரித்தார்கள். அப்போது நான் சட்டை போடுவதில்லை. கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டிருப்பேன். சட்டையில்லாமல் கழுத்தில் ருத்திராட்சத்துடன், நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டிருந்த என் தோற்றத்தைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமானுக்கு என்பால் ஒருவகை அன்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ,"இவர் நன்ருகக் கவிதை பாடுவார். தமிழில் நன்ரு கப் பேசுவார்.