பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஐயரவர்களைத் தரிசித்தது 151

உங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று விரும்புகிறர். அதற் காகத்தான் இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிருேம்' என்வி என்னுடன் வந்தவர்கள் சொன்னர்கள்.

அப்போது ஆசிரியப்பிரான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். பாடம் கேட்க வேண்டுமென்று பலரும் அவரிடம் வருவது உண்டு என்றும், சில காலம் படித்து விட்டுப் போய் விடுவார்கள் என்றும் அப்படிச் செய்வது சரியல்ல, தொடர்ந்து இருந்து பாடம் கேட்கிறவர்களிடந்தான் தமக்கு அன்பு உண்டாகும் என்றும் தெரிவித்தார். அதுபோல இன்றி நான் எப்போதும் தங்களுடன் இருந்து பாடம் கேட்க விரும்பு கிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன்.

'நான் இப்போது இந்தக் கல்லூரியிலிருந்து விலகிச் சென்னைக்குப் போகப் போகிறேன். உனக்கு இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விருப்பமா? அல்லது என்னிடம் இருந்து பாடம் கேட்பதற்கு விருப்பமா' என்று ஆசிரியப் பெருமான் என்னைக் கேட்டார்.

'தங்களிடம் இருந்து பாடம் கேட்பதற்கே விருப்பம்' என்று தெரிவித்தேன். உடனே ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்படி சொன்னர். நான் கம்பராமாயணத்திலிருந்து ஒரு பாடலைச் சொல்லி, அதன் பொருளையும் பொதுவாக விளக்கினேன். அந்தப் பாடல் கூனியின் கூற்று.

' ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்

தாடகை எனும்பெயர்த் தைய லாள்படக் கோடிய வரிசிலே இராமன் கோமுடி சூடுவன் நாளைவாழ் விதெனச் சொல்லினுள்'

என்பது அந்தப் பாடல். இதில் ஏதாவது நயம் சொல்ல முடி யுமா?’ என்று ஆசிரியர் கேட்டார். -

'ஆடவர் என்பதை ஆள் தவர் என்று பிரித்து ஆடவர் நகை புற என்பதற்கு, பொறிகளை அடக்கி ஆண்ட தவசிகள் மகிழ்ச்சி கொள்ள என்ற பொருள் இதனுள் அடங்கியிருக்கிறது' என்று சொன்னேன். ஆண்மை மாசு உறுஅத் தாடகை எனும் பெயர்த் தையலாள் எனச் சேர்த்து ஆண்மக்களுடைய வீரம் குறைபடுவதற் குக் காரணமான அந்தத் தாடகையைக்கொன்ருன் என்றும் கொள்ள லாம். பிறரைப்பற்றிக் கோள் சொல்கிறவர்கள் அகப்பட்டுக் கொண் டால், நான் இந்தப் பொருளில் அல்லவா சொன்னேன்' என்று