பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 என் ஆசிரியப்பிரான்

சொல்வது வழக்கம். அப்படி இதில் ஒர் பொருளே உள் வைத்துச் சொன்னாள்” என்றேன். அன்றியும் கோடிய வரிசிலை இராமன் என்ப தைக் கோடிய இராமன், வரிசிலே இராமன் என்று பிரித்துக் கூட்டி இராமனை இகழ்ந்ததாகவும் கொள்ளலாம் என்றேன். அதைக் கேட்டு ஆசிரியர் மிகவும் உவகை அடைந்தார். அட்சர லட்சம் கொடுக்கலாம்” என்று சொன்னர். அது என்னை ஊக்கப்படுத்து வதற்காகச் சொன்ன வார்த்தை.

தாடகை யெனும் பெயர்த் தையலாள் என்பதிலே தையலாள் என்பது இளம்பெண் என்னும் பொருளுடையது. ஓர் இளம் பெண் ணைக் கொலை செய்தான் என்ற பொருளைத் தையல் என்பது குறிக்கும். வைத்தீசுவரன் கோவிலில் உள்ள பாலாம்பிகையைத் தையல்நாயகி என்று சொல்வதனால் தையல் என்ருல் இளம்பெண் என்பதை உணர்ந்து கொள்ளலாம்' என்று ஆசிரியர் சொன்னர்.

பேசும்போதே எவ்வளவு நுட்பமான கருத்தைத் தெரிவிக் கிருர் என்று எனக்கு வியப்பு உண்டாயிற்று. அப்போதே பாடம் கேட்கத் தொடங்கி விட்டது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டா யிற்று. தாம் சென்னைக்குப் போன பிறகு சென்னைக்கு வந்தால் தம்முடன் இருந்து படிக்கலாம் என்று ஆசிரியப் பெருமான் கருணை உள்ளம் புரிந்தார். என்ருலும் சென்னையில் நம் செலவுக்கு என்ன பண்ணுவது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நாங்கள் சேந்தமங்கலம் திரும்பிளுேம். ஊருக்கு வந்தவுடன், சென்னை வந்து அவரிடம் தமிழ் படிக்க வேண்டுமென்ற என் விருப்பத்தை ஒரு பாடற் கடிதத்தில்ை ஆசிரியருக்குத் தெரிவித்தேன்.

சேந்தமங்கலம் பஞ்சாயத்து யூனியனில் நான் ஒர் எழுத்தராக இருந்தேன். அப்போது எனக்கு 20 ரூபாய் சம்பளம். சில பேர் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததல்ை எனக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை எல்லாம் அவர்கள் அளித்தார்கள். எனவே எனக்குக் கிடைத்த சம்பளத்தைச் சேமித்து வைத்தேன். நூறு ரூபாய் மொத்தமாகச் சேர்ந்தது. அதன்பிறகு அங்கிருந்து புறப் பட்டுச் சென்னைக்கு வரலாம் என்ற எண்ணம் தோன்றியது,