பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. சென்னை திரும்பல்

சிதம்பரத்தில் இருந்த ஆசிரியப் பெருமான் எல்லோருடனும் விடை பெற்றுக் கொண்டு 11-3-1927 இல் சென்னைக்குத் திரும்பி னர். அப்போது சிதம்பரத்தில் நண்பர்கள் எல்லோரும் அவரு டைய பிரிவுக்கு வருந்தி, இனிமேல் அவருடைய சல்லாபம் அதிக மாகக் கிடைக்காதே என்று கண்ணிர் விட்டார்கள். பெரிய கூட்டம் கூடி, விடையனுப்பு விழா நடத்தினர்கள். சென்னைக்குத் திரும்பிய பிறகு நூல்களை ஒய்வாக ஆயலாம் என்ற எண்ணம் ஆசிரியப் பெருமானுக்கு இருந்தது. வயிற்றுவலி இருந்ததஞல் சென்னையில் நோய்க்கு வேண்டிய மருந்துகளே உட்கொண்டு வந்தார்.

பல்கலைக் கழகச் சொற்பொழிவுகள்

அப்போது சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பல்கலைக் கழகத்தினர் பத்து நாள்கள் பேச வேண்டு மென்று எழுதியிருந்தனர். சங்ககால வாழ்க்கை பற்றியும், அக்காலத் தமிழ் இலக்கியம் பற்றியும், பிற்காலத் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பேசலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. இந்தச் சொற்பொழிவுகளை ஆசிரியப் பெருமான் செய்ய வேண்டுமென்று, அக்காலத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த திரு கே. வி. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். அவருடைய வற்புறுத்தலின்மேல் ஆசிரியர் இந்தச் சொற்பொழிவுகளே ஆற்றுவதற்கு இசைந்தார். அப்படியே 10 நாள்கள் அந்தச் சொற்பொழிவுகள் நடந்தன. 1927-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1, 10, 12, 16, 18 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 9, 12, 14, 17 தேதிகளிலும் அந்தச் சொற்பொழிவுகள் சென்னைச் செனட் மண்டபத்தில் நடைபெற்றன. சென்னையிலுள்ள பலரும், வெளியூரிலிருந்து சிலரும் வந்து அந்தச் சொற்பொழிவு களைக் கேட்டு இன்புற்றனர். அந்தப் பத்துச் சொற்பொழிவுகளுக்கும் சன்மானமாகப் பல்கலைக் கழகத்தார் ரூ. 500 கொடுத்தார்கள். அதுவரைக்கும் சிம்னி விளக்கைக் கொண்டே தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தம்முடைய தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகையன்று அது கிடைத்தது. அதை நல்ல சகுனமாக எண்ணித் தம்முடைய தமிழ் வாழ்க்கைக்கே விளக்கம் கிடைத்த தைப் போன்ற ஆனந்தத்தை அடைந்தார்.