பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. நான் ஆசிரியரிடம் சேர்ந்தது

1927-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு டாக்டர் அன்சாரியின் தலைமையில் சென்னையில் நடந்தது. அந்த மாநாட்டிற்குச் சேந்தமங்கலத்திலிருந்து வந்த ஐரா வத உடையார்தம் நண்பர்களுடன் என்னேயும் சென்னைக்கு அழைத்து வந்தார். நாங்கள் தியாகராஜ விலாசத்திற்குச் சென்ருேம். நான் சிதம்பரத்திற்கு ஆசிரியரைப் பார்க்கச் சென்றபோது கையுறை யாக எதுவும் கொண்டு போகவில்லை. மற்றவர்களுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை. ஆசிரியப் பெருமான் அவர்களுடன் சென்னையில் தங்கிப் பாடம் கேட்பதற்காக வந்த சமயத்திலும் ஒன்றும் கொண்டு போகவில்லை.

ஆசிரியப்பெருமானைக் காண வருகிறவர்கள் எல்லோரும் கையில் மலர், பழம் முதலிய பண்டங்களேக் கொண்டு வந்து கொடுப்பார்கள். பிற்காலத்தில் எனக்கு இதைப் பற்றி வருத்தம் இருந்தது. ஆனலும், என்னேயே அர்ப்பணம் செய்து கொண்ட பிறகு பழம் முதலியவை எதற்கு?’ என்று ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டேன்.

என்னைச் சென்னையில் விட்டுவிட்டு ஐராவத உடையார் ஊருக்குச் சென்று விட்டார். எனக்கு மாதம் மாதம் 20 ரூபாய் அனுப்பி வந்தார். அந்த 20 ரூபாயில் சிக்கனமாக வாழ்ந்துகொண்டு ஆசிரியப் பெருமானிடம் பாடம் கேட்கத் தொடங்கினேன். காலைச் சிற்றுண்டி, பகல் இரவு உணவு இவற்றை மாத்திரம் உண்டு வந்தேன். அந்தக் காலத்தில் மாதத்திற்கு ஒன்பது ரூபாயில் உணவுச் சாலைகளில் உணவளித்தார்கள். பிற்பகல் சிற்றுண்டியை நான் உண்பதில்லை.

நான் பாடம் கேட்டது

உடல் நலம் இல்லாமையினல் எந்தப் பதிப்பு வேலையையும் ஆசிரியர் அப்போது செய்து வரவில்லை. அதனல் நாள்தோறும் 300, 400 பாடல்கள் பாடம் கேட்பேன். முதலில் திருவிளையாடற் புராணத்தைக் கேட்டேன். பிறகு பல வகையான பிரபந்தங்களைப் பாடம் கேட்டேன். முன்பே சில நூல்களை நான் படித்திருந்தாலும் எனக்கு இருந்த தமிழ் ஆர்வத்தின் மிகுதியால் எல்லாவற்றையுமே படித்தேன். செய்யுள் செய்யும் பழக்கம் இருந்ததனல்