பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஆசிரியரிடம் சேர்ந்தது 155.

செய்யுளைப் படிப்பதில் பொருளறிந்து படிக்கும் பயிற்சி இருந்தது. அதல்ை நான் பாடம் கேட்கும் போது ஆசிரியப் பெருமானுக்கு. என்னிடத்தில் மிகவும் கருணை உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் ஆசிரியப் பெருமான் தக்கயாகப் பரணியை உரையுடன் வெளியிட வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உடல் நலிவினல் அதில் அதிகமாக ஈடுபட முடியவில்லை.

அப்போது குறுந்தொகையைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அக்காலத்தில் குறுந்தொகையைக் கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்திருந்தார். அதைப் பாடம் கேட்கும்போது நான் காகிதப் பிரதியிலிருந்தே கேட்டேன். அகத்தினே சம்பந்தமான அந்த நூலைப் பற்றி நான் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு கோவையைப் பாடம் கேட் டால் இவையெல்லாம் நன்ருக விளங்கும்' என்று எண்ணி எனக்கு ஆசிரியர் தஞ்சைவாணன் கோவையைப் பாடம் சொன்னர். அதற்குப் பிறகு அகப்பொருள் முழுவதும் நன்ருக விளங்கியது.

ஆசிரியர் சிதம்பரத்தில் இருந்தபோது, மீட்ைசி தமிழ்க் கல்லூரியில் படித்துக்கொண்டு ஆசிரியருடனிருந்து எல்லா வகை யிலும் பணிபுரிந்து வந்த கோதண்டராமன் என்பவர் 1987-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தில் சென்னைக்கு வந்தார். நான் அவரைச் சிதம்பரத்தில் பார்த்திருந்தேன். அவரைக் கண்ட வுடன் அவரோடு பழகவேண்டுமென்று ஒருபாட்டு எழுதி அவருக்குக் காட்டினேன்.

'மீதண் டராமன்னும் மாகங்கை திங்கள்

விலுவத் தொடும்கொன்றை மேவும் சிரக்கை வேதண்ட ராம்.அன்பொ டேபோற்றில் இன்பம்

விளக்கும் பரன்தாளை உன்னும் குணத்தான் ஈதண்டர் ஆமன்றல் இன்தீஞ் சுவைப்பால்

என்னும்சொல் அன்பிற் குழைத்துப் பகர்வோன் கோதண்ட ராமன் சலாபம் விழைந்தேன்

குலாவித் தமிழ்நூல் குறிக்கொள்வதற்கே"

என்ற பாடலே அது. அவருக்குச் செய்யுள் இயற்ற வராது. ஆகவே அந்தப் பாட்டைக் கண்டவுடன் அவர் பிரமித் துப் போளுர், அவரோடு பழகி ஆசிரியரின் இயல்பைத் தெரிந்து கொண்டேன். பாடம் கேட்பதில் ஆர்வம் உடையவராக உள்ள மாளுக்கராக இருந்தால் ஆசிரியப் பெருமானிடம் நிறையக் கொள்ளை கொள்ள லாம் என்ற செய்தியை அப்போது தெரிந்து கொண்டேன்.