பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 6 என் ஆசிரியப்பிாான்

எனக்கும் தமிழ்ப் பசி அதிகமாக இருந்ததனால் ஆசிரியப் பெரு மானுக்கு ஒய்வு இருந்த பொழுதெல்லாம் பல நூல்களைப் பாடம் கேட்டேன். பாடம் கேட்கும்போது பல அரிய செய்திகளை அவர் சொல்வார். தம் ஆசிரியப் பிரானகிய பிள்ளையவர்களைப் பற்றித் சொல்லுவார். அப்போது அவருக்குப் பேருவகை உண்டாகும். எனக்கு அதைக் கேட்கக் கேட்க வியப்பு உண்டாயிற்று. பல புராண நூல்களேத் தாமே எழுதிய பெரும் கவிஞராகிய பிள்ளையவர்கள் சங்க நூல்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது அந்தக் காலத் தின் இயல்பு. ஆசிரியர் பிள்ளையவர்களைப் போன்றே அதிகமான புலமை உடையவர். தமிழ் நாட்டிற்குச் சங்க நூல்களையே வழங்கின வர். ஆறு ஆண்டுக் காலமே பிள்ளையவர்களிடம் இருந்து பாடம் கேட்டவர் என்ருலும் இந்த முதிர்ந்த வயதில் தமிழ்ப் புலமையில் முதல்வராக இருக்கும் அந்தப் பெருமான், தம்முடைய ஆசிரியரான பிள்ளையவர்களை நினைக்கும் போதெல்லாம் உருகுவது கண்டு எனக்கு மிக மிக வியப்பாக இருந்தது. அவருடைய குரு பக்திக்கு எல்லையே இல்லை. ஞானசிரியரிடம் கூட மாணுக்கர்கள் அவ்வளவு மதிப்பும் பக்தியும் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம். இவ்வளவுக்கும் ஆசார விரோதமில்லாமல் பழகினவர்கள் அவர்கள். ஆசிரியப் பெருமானே அந்தணர்; பிள்ளையவர்களோ வேளாளர். ஆனல் அவர்களது உறவுக்கு முன்னலே இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விட்டன. அப்போது அப்பர் சுவாமிகளும், அப்பூதியடி களாரும் அன்பு பூண்டிருந்த எண்ணம் எனக்குத் தோன்றியது.

அந்தாதிகள், கோவைகள், உலாக்கள், பிள்ளைத்தமிழ்கள், புராணங்கள் முதலியவற்றை ஆசிரியப் பெருமான் எனக்குப் பாடம் சொல்லி வந்தார். .

அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் ஞான சிரியராக இருந்த பூரீ வைத்தியலிங்க தேசிகர் அவர்கள் மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தப் பெரு முயற்சி செய்து வந்தார். அந்தக் கும்பாபிஷேகப் பத்திரிகையைச் சிறப்பாக எழுத வேண்டுமென்று ஆசிரியப் பெருமானுக்கு எழுதினர். ஆசிரியப் பெருமான் என்ன மடத்திற்கு அனுப்பித் தேசிகருடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டு வரும்படி செய்தார். அப்படியே நான் மடத்திற்குச் | சென்றபோது ஆசிரியருடைய உடல்நலத்தைப் பற்றித் தேசிகர் மிகவும் விசாரித்தார். ஆசிரியப் பெருமானிடம் மடாதிபதி எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதும், தெள்ளு தமிழினிடத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் நான் தெரிந்துகொண்டேன். -