பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஆசிரியரிடம் சேர்ந்தது 157,

நான் விரைவில் செய்யுள் பாடும் ஆற்றலைப் பெற்றிருப்பதைத் தம்மிடம் வருவோரிடத்தில் எல்லாம் ஆசிரியர் சொல்வார். அவர். களுக்கு முன்னலேயே பாடல்களைப் பாடிக் காட்டும்படியும் சொல். வார்.

அப்போது டி. கே. சிதம்பரநாத முதலியார் அடிக்கடி ஆசிரியப் பெருமானை வந்து பார்ப்பார். 1928 ஏப்ரல் மாதம் திருநெல்வேலி யில் கம்பர் விழா நடைபெற்றது. திருநெல்வேலித் தமிழ் இலக்கியச் சங்கத்தார், முக்கியமாக, சிதம்பரநாத முதலியார், ஆசிரியப். பெருமான விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி எழுதினர். அதன்படி ஆசிரியப் பெருமான் சென்ருர். நானும் அவருடன் சென்றிருந்தேன். விழா மிகச் சிறப்பாக நடந்தது. நான் சில வாழ்த்துப் பாடல்கள் பாடினேன். எல்லோரிடமும் ஆசிரியர் என்னை அறிமுகப்படுத்தி, எனக்கு ஊக்கம் ஊட்டினர். என்னுடைய அன்னையார்கட என்பால் அத்துணே அன்பை வெளிப்படுத்தியதிவில்லை. அப்போது என். மனம் உருகும். என் அன்னையாருக்குத் தன் புதல்வன் என்ற பாசந்தான் இருந்தது. ஆசிரியப் பிரானுக்கு என் தமிழ்ப் பசியும் அதல்ை நூல்களை விரைவில் கற்பதும் தெரியும். சில சமயங்களில் ஆசிரியர் அவர்களது அன்பு அளவுக்கு மிஞ்சியது என்றுகூட நான் எண்ணியதுண்டு. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போய் முருகப் பெருமானத் தரிசனம் செய்து கொண்டு வந்தோம்.

நான் அதுவரைக்கும் திருச்செந்தூரைப் பார்த்ததில்லை. செந்திலாண்டவனைப் பற்றிச் சில பாடல்கனைப் பாடும்படி ஆசிரியர் கட்டளையிட்டார். அப்படியே நான் பாடினேன். அவற்றையெல் லாம் மற்றவர்களுக்கும் சொல்லிக் காட்டும்படி ஆசிரியப் பெருமான் சொல்வது வழக்கம். அவை வருமாறு.

  • சுற்றும் பிறவிப் பிணி அறியாய் நீ; அதனை

முற்றும் உணர்ந்தவரில் முன்னவன்யான்-சிற்றுயிர்கொள் செந்தூர் வனமுதலாய்ச் சென்மித் ததுபோதும்; செந்தூர் முருக அருள் செய்' * காலமெலாம் கைப்பொருளில் கண்ணுய்க் கழித்துவிட்டால்,

காலன்கைப் பாசத்திற் கட்டுண்டு-மேல்இவர்போது அங்கங்த மாதனத்தால் ஆம்பயன்என்? போற்றிடுக அங்கங்த மாதனத்தா ன.' 'அஞ்சும் மலர்மாலை அலரா தவன்கடம்பு

விஞ்சுமலர் மாலைபெற்று மேவுவாய்-நெஞ்சமே செந்தினக ரன்போல் செழுஞ்சுடர் வீசும்கதிர்வேற். செந்தில்நக ரன்பால்நீ சென்று.”