பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கிராமம் பெற மறுத்தது

ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலே ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரை தேவர் அவர்கள். அவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அதோடு ‘செந்தமிழ் என்னும் இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக இராமநாதபுரம் சென்று அவரிடம் துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினர். அப்போது இராமநாதபுரத்திற்குப் புகைவண்டி ஏற்படவில்லை, மதுரைபோய், அங்கிருந்து வண்டி வைத்துக் கொண்டுதான் இராமநாதபுரம் போகவேண்டும்.

ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னேயிலிருந்து புறப் பட்டு மதுரையை அடைந்து, அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கினர்கள். சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர் ஆசிரியரிடம் மிக்க அபிமானம் உடையவர். ஆசிரியர் இராமநாத புரத்திற்குப் புறப்பட்டு, மதுரை வந்த செய்தியை அவர் தெரிந்து கொண்டார். ஆசிரியரைப் போய்ப் பார்த்து, இராமநாதபுரம் செல்ல அங்கங்கே தாம் வண்டியை ஏற்பாடு செய்து தருவதாக மனமுவந்து சொன்னர். வண்டியில் அங்கிருந்து புறப்பட்டு, அடுத்துப் பரமக்குடியில் போய்த் தங்கினர். வைகையில் வெள்ளம் வந்துவிட்டதல்ை அங்கிருந்து உடனே பயணத்தைத் தொடர முடியவில்லை. மூன்று நாட்கள் கழித்தே இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது.

இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் சோமசுந்தர விலாசம் என்று பெயர். ஆசிரியர் இராமநாதபுரம் வந்ததை அறிந்து, பாண்டித்துரைத் தேவர், அவர் வசதியாகத் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

இராமநாதபுரத்தில் ஆசிரியர் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார். அதனால் பாண்டித்துரைத் தேவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. பாண்டித்துரைத் தேவர் தமிழில் நல்ல புலமை உடையவர். பன்னூற்றிரட்டு என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கிரு.ர். காலையிலும், மாலையிலும் அவரும் ஆசிரியரும் சந்தித்து உரையாடி