பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 58 என் ஆசிரியப்பிரான்

1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற குமரகுருபரர் திருநாளுக்கு ஆசிரியப் பெருமான் சென்ருர், நானும் உடன் சென்றேன். விழா முடிந்த பின் நான் நேரே சென்னைக்கு வந்துவிட்டேன். ஆசிரியர் மாயூரம் வந்து: திருவாவடுதுறை மடாதிபதியைச் சந்தித்துச் சல்லாபித்து விட்டு, அப்படியே பெரும்பண்ணையூர் உடையாரைச் சந்திக்கத் திருவாரூர் சென்ருர். அவர் ஊரில் இருக்கவில்லை. ஆகையால் திரும்பி மாயூ ரத்திற்கு வந்து ரெயிலேறிச் சென்னை வந்து சேர்ந்தார்.

ராஜராஜேசுவர சேதுபதி மறைவு

1928-ஆம்வருஷம் ஆகஸ்டு மாதம் ராஜராஜேசுவர சேதுபதி காலமாகிவிட்டார். தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் ஆதரித்து வந்தவர் அவர். தமிழ் நூல்கள் பல வெளிவர வேண்டுமென்பதில் ஆர்வம் உடையவர். அந்த மன்னரிடத்தில் ஆசிரியப் பெருமா னுக்கு மிக்க மதிப்பு இருந்தது. அவர் காலமானதைக் கேட்டு ஆசிரியர் துடிதுடித்துப் போர்ை. உடனே அவருடைய உணர்ச்சி பத்துப் பாடல்களாக வெளியாயிற்று. அவற்றில் சில வருமாறு.

காகமெலாம் குயிலாகக் காண்கலியில் நீவிண்ணம்

போகல்புரிந் தன; அடுத்தோர் புன்கணுறல் அறிந்திலேயே! பாகமொரு பெண்ணுடைய பரம்பொருளை கினைந்துருகும் ஏகமுறு மனமுடைய இராசரா சேந்திரனே."

விருப்பமகன் றவர்களுமே விரும்புற வீற்றிருந்திட் டுருப்பமறத் தமிழ் விருந்தை ஊட்டிடுதல் மறப்புறுமோ? திருப்புகழா தியவற்றைத் திப்பியநல் இசையுடன்சொற் றிருப்புளமும் குழைவிக்கும் இராசரா சேந்திரனே."

பால்வேண்டும், பழம் வேண்டும், பணம்வேண்டும், பலஉடுப்பு மேல்வேண்டும், கோல்வேண்டும், விரைசகடம் மிகவேண்டும், ஆல்வேண்டும் எனலன்றி அரசேகின் போல்தமிழ்த்தொன் னுரல்வேண்டும் என அன்பின் நுவல்பவரைக் கன்டிலமே."

[-o,-gūmā); Hall]

காசிவாசி சாமிநாதத்தம்பிரான்

அக்காலத்தில் திருப்பனந்தாளில் காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் காசிமடத்தின் தலைவராக இருந்தார். ஆசிரியப் பெரு

மானிடம் பாடம் கேட்டு அவருடைய நூற்பதிப்பில் உதவிசெய்தும் வந்த அவர் ஆசிரியப்பெருமானத் தெய்வமாகவே கொண்டாடினர்.