பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஆசிரியரிடம் சேர்ந்தது 1.59

அவர் தம்முடைய காலத்திலேயே தமக்குப்பின் சாமிநாதத் தம்பிரான் என்பவரைத் தம் பிற்முேன்றலாக அபிடேகம் செய்து வைத்தார்.

இளவரசு சாமிநாதத் தம்பிரான் பெரும் புலவர். கொட்டை யூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். மிக்க மதியூகி. அவர் ஒருமுறை சென்னைக்கு வந்து சேத்துப்பட்டில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி ஆசிரியப் பெருமான் அவரைப் போய்ப் பார்த்து வருவார். அப்போது நானும் உடன் செல்வேன். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகருடைய பாடல்களைப் பற்றித் தம் பிரான் பேசும் போதெல்லாம் ஆசிரியப் பெருமான் அந்தப் பாடல்களின் நயத்தை எடுத்துச் சொல்வார். அந்த நூல் தங்கள் கையால் வெளிவந்தால் எனக்கும், தமிழ் உலகத்திற்கும் மிகவும் பயன் ஏற்படும்' என்று சாமிநாதத் தம்பிரான் சொன்னர். 'இறைவன் திருவருள் இருந்தால் அப்படியே செய்யலாம்' என்று ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்குப்பின் அந்த நூல் வெளியாயிற்று.