பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. தமிழ்விடுதூது ஆராய்ச்சி

2–9–1928 இல் மாயூரநாதர்கோவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. அதற்குப் பல சிவாசாரியர்கள் வந்திருந்தார்கள். ஆசிரியப் பெருமான் எந்த த் துறையில் யார் வல்லவராக இருத்தா லும் அவரிடமிருந்து செய்திகளைத் தெரிந்துப் பயன்யடுத்திக் கொள் வது வழக்கம். எல்லாவற்றையும் ஒருவர் தெரிந்துகொண்டிருக்க முடியாது. ஒர் இளைஞன் ஏதேனும் ஒரு பொருளைச் சொன்னல் அதையும் கேட்டுக் குறித்துக் கொள்வார்.

காக்கை வாயினும் சொற்கொள்வரால்' என்று அடிக்கடி அவர் சொல்வது வழக்கம்.

மாயூரத்தில் சிவாசாரியர்கள் கூடியிருந்தார்கள். தமிழ் விடுதூது’ என்ற நூலை அப்போது ஆசிரியர் ஆராய்ந்து கொண்டிருந்தார். அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அந்தச் செய்திகளே அந்தச் சிவாசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன் பிறகு அந்த நூலே மிகச்சிறப்பாக வெளி யிட்டார். -

தமிழ்விடு துரதில் ஆசிரியப்பெருமான் ஈடுபாடு கொண்டதற்கு முக்கியமான காரணம் அதிலுள்ள ஒரு கண்ணி. அதை ஆராய்கிற போது பல சமயங்களில் அவர் உணர்ச்சி வசப்படுவார்.

"இருந்தமிழே உன்னல் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்த மென்ருலும் வேண்டேன்’

என்ற கண்ணியில் அவர் உள்ளம் சிக்கிக் கொண்டது. திருப்பித் திருப்பி அதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். பிறகு 2 அடி சேர்த்து,

இருந்தமிழே உன்னுல் இருந்தேன்; இமையோர்

விருந்தமிழ்தம் என்ருலும் வேண்டேன்;-திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்க வேகடைக்கண் பார்'

என்று தம் கருத்தை ஒரு வெண்பாவாக வெளியிட்டார். அது தக்கயாகப்பரணி முகவுரையில் இருக்கிறது.