பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்விடுதூது ஆராய்ச்சி 16t

மேலும் தமிழ்விடு துரதில்,

  • கற்பார் பொருள்காளுர் காசுபனங் காணிலுனை

விற்பா ரவர்பால்நீ மேவாதே'

என்ற கண்ணி வருகிறது. அதைப் படிக்கும்போது ஆசிரியர் கண்ணிர் விட்டார், நாளெல்லாம் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாருக்கும், விலையின்றி வழங்கலாம். ஆல்ை காகிதம் வாங்குவதற்கும், அச்சுக் கூலிக்கும் காசு இல்லாமல் எப்படிப் புத்தகங்களைப் பதிப்பிக்க முடியும்? எனக்கு மாத்திரம் தக்க வசதியிருந்தால் நூல்களை எல்லாம் அழகாகப் பதிப்பித்து எல்லோருக்கும் விலையின்றிக் கிடைக்கும்படி செய்வேன். இறைவன் அந்நிலையில் என்னை வைக்கவில்லையே!” என்று வருந்தினர். புத்தகங் களே விற்பனை செய்வதில் அவர் எவ்வளவு மனச் சோர்வு உடையவ ராக இருந்தார் என்பதை இந்த நிலை காட்டிற்று.

தமிழிசை பற்றிய பேருரை

சென்னை இந்தியக் கிறிஸ்துவர் இளைஞர் சங்கத்தில் (ஒய். எம். சி. ஏ.) இசையைப்பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று அக்காலத்தில் சென்னையில் இருந்த ரெவரெண்ட் பாப்ளி துரையும், பேராசிரியர் சாம்பமூர்த்தியும் ஆசிரியரைக் கேட்டுக்கொண்டார் கள். தமிழ் இசையைப்பற்றி விரிவான முறையில் அடுத்தடுத்துச் செய்திகள் கோவையாக, சுவையாக அமைய ஒரு சொற்பொழிவு ஆற்றினர். அந்தச் சொற்பொழிவைக் கேட்ட யாவரும் வியந்தார் கள். அந்தச் சொற்பொழிவை அப்படியே எழுதிச் சுதேசமித்திரன் பத்திரிகையில் ஆசிரியப் பெருமான் வெளிவரச் செய்தார். அதைக் கண்டு, தமிழ் இசை பெற்ற அஸ்திவாரம் இது என்று பலர் எழுதி ஞர்கள். செந்தமிழ்ப் பத்திரிகை அதை வெளியிட்டுப் பாராட்டியது. ஆசிரியர் இசைவாணர் பரம்பரையில் தோன்றியவர் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன்.

பூரண தரிசனம்

சென்னையை அடுத்துள்ள திருவான்மியூர் என்ற தலம் பாடல் பெற்றது. அந்தக் காலத்தில் இப்போது போல அவ்வளவு கூட்டம் அங்கே இருக்கவில்லை. ஆசிரியப் பெருமான் ஒய்வு இருக்கும் போதெல்லாம் அங்கே சென்று தங்குவார். குறுந்தொகை ஆராய்ச்சியெல்லாம் பெரும்பாலும் அந்த ஊரில்தான் நடந்தது. அங்கேயுள்ள மருந்தீசுவரர் சந்நிதானத்தில் உட்கார்ந்து ஜபம் செய்வது அவரது வழக்கம். கோவில் பிரசாதம் என்ருல் ஆசிரிய ருக்கு மிகவும் விருப்பம். அது தூயதாக இருக்கும் என்பதும்,

3604–11