பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 என் ஆசிரியப்பிரான்

இறைவன் பிரசாதம் என்பதுந்தான் காரணம். வெறும் சம்பாச் சாதத்தை மிகவும் சுவைத்து உண்பார். தேங்காய்த் துவையலைத் தொட்டுக்கொண்டு உண்பது அவரது வழக்கம். அந்தக் காலத்தில் பல இடங்களில் செலவர்கள் மிகச் சிறந்த விருந்தை அவருக்கு அளிப்பார்கள். அவற்றையும் நன்ருகச் சுவைத்து உண்பார். நல்ல விருந்தைச் சுவைத்து உண்பதுபோலச் சங்க இலக்கியங்களை நன்ருக அறிந்து நயம் கண்டு வெளிப்படுத்திய அவர், சின்னஞ்சிறிய பிரபந் தங்களையும் வெறும் மிளகு பொடியும், உபபும் சேர்த்த சம்பாச் சாதத்தைச் சுவைத்து உண்பது போல, சுவைத்து ஆராய்ந்து வெளி யிட்டார். சாப்பாட்டுத் திறத்திலும், பாட்டுத் திறத்திலும் எதை யும் புறக்கணிக்காமல் தெய்வப் பிரசாதமாக, தூயதாக இருக் கிறதா என்பதனை மட்டும் கண்டு சுவைக்கும் இயல்பை அவரிடம் கண்டேன்.

இளமை மிடுக்கோடு இருந்த எனக்கு, சங்க நூல்களை நன்கு ஆராய்ந்து, பதிப்பித்துச் சுவைத்த இவர்களுக்குப் புராணங்களையும், பிரபந்தங்களையும் எவ்வாறு சுவைத்து ஆராய்ந்து பதிப்பிக்க முடி கிறது' என்று தோன்றும். பிறகுதான் எனக்கு உண்மை விளங் கிற்று. உணவிலே ஊறுகாயும் வேண்டும்; காய்கறிகளும் வேண்டும்; குழம்பும் ரசமும் வேண்டும்; அன்னமும் வேண்டும். ஒவ்வொன்றுக் கும் ஒரளவு உண்டு. கொஞ்சம் ஊறுகாய் இல்லையென்ருல் பல வகையான இனிப்புப் பண்டங்களைச் சுவைக்க முடியாது. அதுபோல அவர் தமிழ்ப் பாடல்களேயும் சுவைத்தார்.

தண்டமிழ்த் தாயின் முகம் பேரழகுடன் இருக்கும். அவளது திருவடியும் அழகாக இருக்கும். திருவடியிலுள்ள நகமும் அழகாக இருக்கும். முகத்தை அனுபவிக்கிற நிலை வேறு; நகத்தை அனு பவிக்கிற நிலை வேறு. இரண்டிடத்திலும் ஆர்வம் உண்டாவதற்குக் காரணம் இரண்டும் தமிழ்த் தாயின் உறுப்புகள் என்ற எண்ணற் தான். முகத்தில் காட்டும் அன்பும், நகத்தில் காட்டும் அன்பும் பொதுவாக இருந்தாலும் அவற்றில் வேறுபாடு உண்டு. ஆசிரியட் பெருமான் நூல்களே ஆராய்ந்து அநுபவிக்கும் வகையிலும் இந்த வேறுபாட்டை நான் நன்ருக உணர்ந்து கொண்டேன். தமிழ்: தாயின் பூரணதரிசனத்தைக் கண்டவர் அவர்.

இங்கே ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவு வருகிறது. கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஒருவர் ஆசிரியப்பிரானிடம் வந்து பாட கேட்க விரும்பினர். பாடம் சொல்வதில் ஆசிரியருக்கு விருப்பம் 'நன்ருகக் கேட்கலாம்' என்ருர். 'முதலில் திருவரங்கத் தந்தாதி யைப் பாடம் சொல்கிறேன்' என்று கூறினர். அதைக் கேட்டு