பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்விடுதூது ஆராய்ச்சி 1 63

சென்ற பேராசிரியர் பிறகு பாடம் கேட்க வரவே இல்லை. 'ஐயரவர் களிடம் சிறு நூல்களைப் பாடம் கேட்பதா? சங்க நூல்களே அல்லவா கேட்கவேண்டும்? அவற்றைக் கேட்டால் நான் ஐயரவர்களிடம் சங்க நூல்களைப் பாடம் கேட்டவன்’ என்று சொல்லிக் கொள்ள லாமே!’ என்று அவர் நினைத்தார்.

விக்கிரமசிங்கபுரத்தில்

9-4-19 29-இல் திருவிடைமருதுரரில் உள்ள மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு ஆசிரியர் சென்றிருந்தார். நானும் உடன் சென்றேன். கும்பா பிஷேகத்தைத் தரிசித்துவிட்டு, திருநெல்வேலி சென்று அங்கிருந்து விக்கிரமசிங்கபுரம் போய்ச் சிவஞான சுவாமிகள் குரு பூஜையில் ஆசிரியப் பெருமான் தலைமை தாங்கினர். விக்கிரமசிங்க புரத்தில் சிவஞான சுவாமிகள் அவதரித்தார். அவருடைய குரு பூஜை ஒவ்வோர் ஆண்டும் அங்கே நடைபெற்றது. நாங்கள் அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்தோம்.

ஒரு நாள் காலையில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது ஒரு கடிதம் வந்தது. சென்னையிலிருந்து அவருடைய குமாரர் கல்யாண சுந்தரமையர் அதை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நீண்ட வெண்மைத் தாடியோடு கூடிய முதிய அந்தணர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார். தம்மைவிட முதியவர் யாராக இருந்தாலும் அவரைச் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணக்கம் செய்வது ஆசிரியர் வழக்கம். தம்முடைய இளமைக் காலத்தில் தமக்குத் தமிழ் கற்பித்த அரியிலுர்ச் சடகோபையங்கார் மனைவியை அவருடைய முதிய பிராயத்தில் ஆசிரியப்பிரான் தரையில் படிந்து வணங்கியதை நான் கண்டிருக்கிறேன். அன்றும் அவ்வாறே அந்த முதியவருக்கு வணக்கம் செய்துவிட்டு அந்தக் கடிதத்தை அவரிட மிருந்து வாங்கிக்கொண்டார். கடிதத்தை அவர் பிரித்துப் பார்த்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியைக் கண்டேன். ஆசிரியப் பெருமானுக்குத் திருப்தியளிக்கும் செய்தியாக இருக்கும் அது என்பதைத் தெரிந்துகொண்டேன்.

தம்முடைய மாணுக்கர்களுக்கு நல்ல நில் உண்டாக வேண்டு மென்று எண்ணுகின்றவர் ஆசிரியர். அவர்களைச் சிறந்த நிலையில் இருக்கும்படியாகச் செய்ய வேண்டுமென்பது அவரது பெருங் கருணை. அந்தக் கடிதத்தில் அப்படி ஒரு செய்தி இருந்தது.

சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்

பள்ளிக்கு ஒரு தமிழ்ப் பண்டிதர் வேண்டியிருந்தது. அது சம்பந்த மாக அங்கே தலைமைத் தமிழாசிரியராக இருந்த சற்குணர்