பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 என் ஆசிரியப்பிரான்

ஆசிரியப் பெருமானைச் சந்தித்து, தக்க ஒருவரைப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்ளத் தியாகராச விலாசத் திற்கு வந்திருக்கிரு.ர். அவர் வந்திருந்தபோது ஆசிரியரிடம் பாடம் கேட்ட வி.மு. சுப்பிரமணிய ஐயர் வித்துவான் பரீட்சை எழுதிவிட்டு அங்கே வந்திருந்தார். அவர் சிறந்த அறிவு உடையவர் என்றும், கிறிஸ்துவக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளிக்கு ஏற்றவர் என்றும் கல்யாணசுந்தரமையர் சொல்லியிருக்கிரு.ர். திரு சற்குணர் அவரையே நியமித்துக்கொள்ளச் சம்மதித்துச் சென்றிருக்கிரு.ர்.

இந்தச் செய்திதான் கடிதம் மூலமாக விக்கிரமசிங்கபுரத்தில் இருந்த ஆசிரியருக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தைக் கொடுத்த பெரியவரை வணங்கி அவரிடமிருந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்டதனால் தமக்கு உண்டான நன்மை இது என அவர் சொன்னபோது அவருக்குண்டான உவகைக்கு அளவில்லை. தம் மாளுக்கருக்கு நலம் உண்டானதை அவர் தமக்குக் கிடைத்த நன்மையாகவே எண்ணினர்.

திருமயிலைத் திரிபந்தாதி

திருமயிலைத் திரிபந்தாதி என்னும் பிரபந்தம் மிகவும் அழகான நூல். ராமையர் என்பவர் இயற்றியது. மீனாட்சிசுந்தரம் பிள்ளே முதல் முதலாகத் திருவாவடுதுறையில் வசித்தபோது அந்தப் பிரபந்தத்தை ஆசிரியருக்குப் பாடம் சொன்னர். அதுமுதல் ஆசிரியப் பெருமானுக்கு அந்த அந்தாதியில் ஒர் அபிமானம் இருந் தது. அதற்குக் குறிப்புரை எழுதி அதனை 1888-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். х

கச்சியப்ப முனிவர் விநாயக புராணம், காஞ்சிப் புராணத்தில் ஒரு பகுதி முதலியவற்றை இயற்றியவர். அவரைப் பற்றி ஆசிரிய ஒன்று சொல்வது உண்டு. அவருடைய ஆசிரியர் மீட்ைசிசுந்தரம் பிள்ளை கச்சியப்ப முனிவரிடம் மிகவும் பக்தி கொண்டவர் 'இறைவன் என் முன்னல் தோன்றி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறையாவது தரிசனம் பண்ண வேண்டும்’ என்று கேட்பேன்’ என்று பிள்ளைய வர்கள் சொல்வாராம். அம்முனிவர் கச்சி ஆனந்த ருத்திரேசர் மீது பல பிரபந்தங்களை இயற்றியிருக்கிரு.ர். அவற்றில் வண்டு விடு தூது’ என்ற நூலை ஆசிரியர் பதிப்பித்தார்.

கம்பராமாயணமும் தேவாரமும்

வெள்ளக்கால் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் கம்ப .ராமாயணத்தில் ஆழமான பயிற்சி உடையவர். அதிலுள்ள