பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்விடுதூது ஆராய்ச்சி 1 65

சுவையான பாடல்களைத் தொகுத்துக் கம்பராமாயண இன் கவித் திரட்டு என்று பெயரிட்டு வெளியிட்டிருக்கிரு.ர். ஆசிரியப் பெருமானுடைய திருக்கரத்தால் கம்பராமாயணம் வெளி வந்தால் தமிழ்நாட்டுக்குப் பெரும்பேறு கிடைத்ததாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆசிரியப்பெருமான் அவ்வப்போது கம்பராமாயணத்தைப் படிக்கும்படி சொல்லிக் குறிப்புக்களை எழுதி வைத்திருந்தார். எனக்குப் பாடம் சொல்லும்போது பல குறிப்புக் களை எழுதும்படி செய்வார். ஆனால் இறைவன் திருவருள் ஆசிரியப் பெருமான் கம்பராமாயணத்தைப் பதிப்பிக்க வாய்ப்பு அளிக்க

தேவாரத்தையும் தலக் குறிப்புக்கள், இலக்கியக் குறிப்புக்கள், சித்தாந்தக் குறிப்புக்கள் ஆகியவற்றேடு விரிவாக அச்சிட வேண்டுமென்ற ஆர்வம் ஆசிரியப்பெருமானுக்கு இருந்தது. கம்பராமாயணப் பதிப்பையும், தேவாரப் பதிப்பையும் அவர் திருக்கரத்தால் அளித்திருந்தால் தமிழ்நாட்டிற்குப் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கும். ஆனல் அந்தப் பேறு கிடைக்காமற் போயிற்று.

ஆயிரம் ரூபாய்ப் பரிசு

திருப்பனந்தாள் மடத்தின் இளவரசாக இருந்த சாமிநாதத் தம்பிரான் நல்ல புலமை உடையவர். எல்லா வகையிலும் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவர். வறுமையிலும், கடன் சுமையிலும் ஆழ்ந்து கிடந்த திருப்பனந்தாள் மடத்தைத் தமது முயற்சியினல் மிகச் சிறந்த நிலைக்குக் கொண்டு வந்தார். பல தமிழ் நூல்களை வெளியிடுவதற்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துக்குப் பெருநிதி வழங்கி ஏற்பாடு செய்தார். லட்ச ரூபாய் என்பது என் நினைவு. சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஆண்டுதோறும் நடத்தும் தமிழ் வித்துவான் பரீட்சையில் முதலில் தேறும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.

1929-ஆம் ஆண்டு வித்துவான் பரீட்சையில் முதல்வராக ஆசிரியப்பெருமானுடைய மாணக்கர் வி. மு. சுப்பிரமணிய ஐயர் தேர்ச்சி பெற்ருர். அவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவது எனத் தீர்மானித்தார்கள். முதல்முதலாக ஆரம்பிக்கப்பெறும் அந்தப் பரிசு வழங்கும் வைபவத்தைச் சிறப்பாக நடத்த வேண்டு மென்று ஆசிரியப்பெருமானைக் கேட்டுக் கொண்டார், திருப்பனந் தாள் சின்னத் தம்பிரான். அவர் விருப்பப்படியே அந்த விழாவைக் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடத்துவதாக ஏற்பாடா யிற்று. அழைப்பிதழ் ஆசிரியப்பெருமான் பெயரிலேயே எல்லோருக் கும் அனுப்பி வைக்கப்பெற்றது. 1929-ஆம் ஆண்டு செப்டம்பர்