பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 66 என் ஆசிரியப்பிரான்

மாதம் 15-ஆம் தேதி அந்தப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது அதைச் சிறப்பித்து நான் சில பாடல்கள் பாடினேன்.

  • தருமிக்குப் பொழில்சிறக்கும் திருப்பனசைச் சொக்கலிங்கத்

தவரா சன் சீர்த் தருமிக்குப் பொற்கிழியை அளித்ததுபோல் இங்ாாளில்

தமிழ்வல் லோர்க்குத் தரும்.இக்கு வலயத்தில் ஆயிரம்பொன் எனக் கேட்டார்

தரணி மாந்தர் தரும்.இக்கு மொழிப்புல வோர் தாமும்மிகக் களித்தனர்தண்

தமிழ்ச்சீர் ஓர்ந்தே." * திண்டிறல் ஈசன் வாழும் திருப்பனர் தாளில் இன்று

தொண்டர்கள் போற்ற நிற்கும் சொக்கலிங் கப்பேர் வள்ளல் பண்தரு புலவோர் கட்குப் பரிசில்கள் வழங்கி நன்கு தண்டமிழ் காக்க வந்தாள், தவத்தினைக் காக்க வந்தான்' என்பன அவற்றில் இரண்டு பாடல்கள்.

அதுமுதல் பத்தாண்டுகள் வரைக்கும் ஒவ்வோர் ஆண்டும் வித்துவான் பரீட்சையில் முதல்வராகத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழாவை ஆசிரியப்பெருமானக் கொண்டே திருப்பனந்தாள் காசிமடத்துத் தஃலவர் நடத்தி வந்தார். அதன் பிறகு அதற்குரிய மூலதனத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொடுத்து, ஆண்டுதோறும் அந்தப் பரிசுத் தொகையை அளித்து வரும்படி ஏற்பாடு செய்தார்.

தனித் தமிழ் வித்துவான் பரீட்சையில் முதல்வராகத் தேறுகிறவர்களுக்குத் திருப்பனந்தாள் மடத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்ததுபற்றிச் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்த ஆயிரம் ரூபாயை இரண்டு மூன்று பகுதியாகப் பிரித்து முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்ரும் பரிசு என்று கொடுக்கலாம் என்று பல பெரிய மனிதர்கள் திருப்பனந்தாள் மடாதிபதியிடம் சொன்னர்கள். ஆசிரியப்பெருமானிடம் அந்தக் கருத்தைக் காசிமடத்து அதிபர் தெரிவித்தார். ஆசிரியர் அதை ஏற்கவில்லை. ஏழை வித்துவானுக்கு மொத்தமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பது என்பது அருமை. பரிசு பெற்றவர் தம் வாழ்நாள் முழுவதும் காசிமடத்தை வாழ்த்திக்கொண்டிருப்பார். வேண்டுமானல் இரண்டாம், மூன்ரும் பரிசுக்குத் தனி நிதி வைக்கலாமே தவிர முதல் பரிசு ஆயிரம் என்பதைப் பிரிக்கத் தேவையில்லை. இறைவனே ஞானசம்பந்தருக்கு ஆயிரம் கொடுத்த தாகத்தான் ஆவடுதுறைத் தேவாரத்தில் வருகிறது. ஆயிரம்