பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்விடுதூது ஆராய்ச்சி 167

கொடுப்பர் போலும் ஆவடு துறையி னரே என்பது அது. ஆகவே முழுமையாக ஆயிரம் ரூபாய் வழங்குவதே சிறந்தது' என்று ஆசிரியப்பெருமான் சொன்னர். அவர் கருத்தையே திருப்பனந்தாள் காசி மடாதிபதி ஏற்றுக்கொண்டார்.

பாரி காதை

இராமநாதபுரம் மன்னர் இராஜ இராஜேசுவர சேதுபதி மறைந்த பிறகு அவருடைய மைந்தர் சண்முகநாத சேதுபதி பட்டத்திற்கு வந்தார் 1929 ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி அந்தப் பட்டாபிஷேகம் நடந்தது. அதற்கு ஆசிரியப்பெருமான் போயிருந் தார். பெருங்கூட்டம் கூடியிருந்தது. பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற மன்னரை அவருடைய சிறிய தந்தையார் வணங்கும் போது எனக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது. அரச பதவிக்கு மதிப்புக்கொடுத்துச் சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடு இல்லாமல் வணங்குவது வழக்கம். சேது சம்ஸ்தான மகாவித்துவான் இராகவையங்கார் வீட்டில் ஆசிரியப்பெருமான் அப்போது தங்கியிருந்தார்.

இராகவையங்கார் பாரி காதை என்ற அருமையான நூலை இயற்றியிருக்கிருர். வெண்பாக்களாலானது அந்த நூல். அதை ஆசிரியப்பெருமான் முழுவதும் கேட்க வேண்டுமென்பது அவரது விருப்பம். சேதுபதி மன்னர் பட்டாபிஷேகத்திற்குப் போயிருந்தபோது அங்கே இரண்டு மூன்று நாள் தங்க வேண்டி யிருந்தமையில்ை அந்தச் சமயத்தை அந்த நூலைக் கேட்பதில் பயன் படுத்திக் கொண்டார்.

இராகவையங்கார் அமர்ந்திருக்க, அவர் அருகில் ஆசிரியப் பெருமான் அமர்ந்திருந்தார். நான் பாரி காதையை வாசித்துக் கொண்டு வந்தேன். அதில் சங்க நூற் கருத்துக்கள் அமைந்திருப் பதை அங்கங்கே எடுத்துக் காட்டி நான் படித்தபோது இராகவையங்காருக்கு மிகவும் மகிழ்ச்சி. நூல் முழுவதையும் ஆசிரியப்பெருமான் கேட்டதில் அவர் அளவற்ற இன்பத்தை அடைந்தார். அவ்விடத்தில் ஆசிரியப்பெருமான் சிவபாடல் களைப் பாடினர். அவை வருமாறு:

பாரி அளித்த மகளிர்தமைப் பரிந்தே ஒளவைப் பெயர்ப்பெரியார் காரி அளித்த மைந்தருக்குக் கலியா ணம்செய் காதையெனும் வேரி அளித்த விருந்துண்டேன்; விறல்சேர் நாக நாதமன்னன் வாரி அளித்த மணியனையான் மகுடாபி டேக வளர்தினத்தே."