பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 என் ஆசிரியப்பிரான்

ஞர்கள். திரு ரா. இராகவையங்கார் முதலிய புலவர்களும் உடன் இருந்தார்கள். ஆசிரியர் பேசும்போது பல இலக்கியத்திலுள்ள நயங்களையும், தம் அனுபவத்தால் தெரிந்துகொண்டசெய்திகளையும் எடுத்துச் சொல்வார்; நயம்பட நகைச்சுவை தோன்றும்படி பேசுவார். அவற்றைக் கேட்பவர்கள் நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

பாண்டித்துரைத் தேவர் நாள்கள் போகப் போக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். என்னுடைய தாயார் இறந்து போனதில் எனக்கு ஒரு நன்மை ஏற்பட்டது. தாங்கள் இங்கே வந்து தங்க வேண்டுமென்று எழுதினால் வந்து தங்குவீர்களா? தங்களுக்குத் தமிழ்த் தொண்டே நாள் முழுவதும் இருக்கும். ஏதோ ஒரு சம்பிர தாயத்திற்காகத் துக்கம் கேட்க வந்தீர்கள். தங்களோடு சல்லாபம் செய்துகொண்டிருப்பதில் என் அன்னே இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. நல்லவர்கள் எதைச் செய்தாலும் அது நன்மையையே தரும் என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னுடைய தாயார் மிகவும் சிறந்தவர். அவருடைய உயர்ந்த குணங்களை எல்லாம் நான் அறிந்து மகிழ்ந்து இருக்கிறேன். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். அவர் இறந்த பிறகும்கூட, தங்களை எல்லாம் வரும்படி செய்து என்னைத் தமிழ் அமுதக்கடலில் ஆழ்த்தினர்கள். இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட தற்கு மகிழ்ச்சி அடைகிறேன்' என்று பாண்டித்துரைத் தேவர் நய மாகப்பேசினர். அந்த ஒரு மாதம் போனதே தெரியவில்லை. தினந் தோறும் பாண்டித்துரைத் தேவர் பல சங்கீத வித்துவான்களை வரவழைத்துக் கச்சேரிகளும், கதாகாலட்சேபங்களும் தொடர்ந்து நடக்கும்படி செய்தார். அவருடைய ஆற்றலையும், சிறப்பையும் அறிந்து புலவர்கள் வியந்தார்கள்.

ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் சேதுபதி மன்னரைப் பார்க்கப் போயிருந்தார். மன்னரிடம் பேசிக்கொண்டிருந்தவர் புறப்படும்போது பாஸ்கர சேதுபதி பாண்டித்துரைத் தேவரைப் பார்த்து, 'சாமி, கொஞ்சம் இருங்கள், ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லவேண்டும்' என்று சொன்னர், பாண்டித்துரைத்தேவரைச் சாமி என்று அழைப்பது வழக்கம். எல்லோரும் போன பிறகு மகாராஜா ஒரு கருத்தைத் தெரிவித்தார். அது கேட்டு மிகமகிழ்ந்து, அது மிகவும் பொருத்தமானது என்று பாண்டித்துரைத்தேவர் சொல்லிவிட்டு ஆசிரியர் இருந்த விடுதிக்கு வந்தார்.

ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் சொன்னர். தங்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்' என்று