பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 என் ஆசிரியப்பிரான்

தொன்னூற் புலவர் கருத்தெல்லாம் துலங்க நின்வா யிற்புலவன் பன்னூல் பயின்ற இராகவமால் பாடும் பாரி காதையெனும் இந்நூல் நயத்தில் என்உள்ளம் ஈடுபட்டே கிடந்ததம்மா! நன்னூல் நயந்தேர் தென்முகவை நாக நாத நரபதியே.”

" சீரை அளித்த ரகுநாத சேதுபதிமால் அமுதக விக்கு

ஊரை அளித்தான் ஒருகோவைக் குலகம் புகழும் இரா கவளும் பேரை அளித்த கவிஞனுக்கென் பேற்றை அளிப்பா யோ அறியேன்: நாரை அளித்த கொடைகாக காதன் என்னும் நரேந்திரனே."

திருமலி பறம்பிற் பாரியாம் வள்ளல்

சீரெலாம் விரித்தொரு காதை உருமலி சங்க நூல்பல உணர்ந்தே

உரைத்தனன், சேதுகாவலர்தம் குருமலி அவையப் புலவன விளங்கிக் குலவுசீர் இராகவப் பணவன் மருமலி தமிழின் நய மெலாம் ஒருங்கே மலிந்திடக் கவிஞர் இன் புறவே.' "புலவர்கள் பலர்முன் அதை அரங் கேற்றப்

புரிவித்துப் பொற்கிழி அளித்தான்; நிலவுறு செட்டி நாட்டினுக் கரசன்

கிறைதிரு மதிகுணம் உடையோன் கலவுறு கலைக்குக் கோயில் என் றுரைபல்

கலைக்கழ கத்தினை நிறுவி உலகுள தனையும் தன் புகழ் நாட்டி

உயர்அண்ணு மலைப் பெயர் மணியே.' அதன்பின்பு அந்த நூல் வெளியாயிற்று. அப்போது ராகவை யங்கார் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். அந்த நூலின் அரங்கேற்றத்தின்போது அண்ணுமலே செட்டியார் ராகவையங்காருக்கு ஒரு பொற்கிழி அளித்தார். அதைத்தான் பாடல் றிக்கி *

குறிக்கிறது இராமேசுவர விஜயம் மகுடாபிடேகத்தின் பிறகு இராமேசுவரம் போகலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அவ்வாறே இராமேசுவரம் சென்ருேம். அப்போது இராமேசுவரம் கோவிலைச் சேர்ந்த எல்லோரும் ஆசிரியப்பெருமானுக்கு மதிப்புத் தந்து சுவாமி தரிசனம் செய்து வைத்தார்கள். பின்பு அங்கிருந்து தனுஷ்கோடி சென்ருேம். நான் அதற்குமுன் தனுஷ்கோடி சென்றதில்லை. அங்கே சிறந்த வடமொழிப் புலவர் ஒருவர் இருந்தார். அவரோடு உரையாடி இன்புற்முர். பழைய காலத்து வித்துவான்களின் ஆழமான படிப்பை அவரிடம் கண்டேன். -