பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. தக்கயாகப்பரணிப் பதிப்பு

தக்கயாகப்பரணி வேலை நடந்துகொண்டு வந்தது. அதை அச்சுக்குக் கொடுத்து, ஆசிரியர் அச்சுப் பிரதியைத் திருத்தம் செய்துகொண்டிருந்தார். ஒட்டக்கூத்தர் பாடிய அந்த நூலைக் காட்டிலும், அதன் உரை மிகச் சிறப்பாக இருந்தது. பல வகை யான, நுட்பமான செய்திகள் அந்த உரையில் இருந்தன. அவற்றைத் தெளிவுபடுத்துவதற்குச் சில வடமொழிப் புலவர்களின் உதவியை ஆசிரியர் நாடிப்பெற்ருர். அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட செய்திகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பரணி நூல் சிறியதாக இருந்தாலும் உரை, ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் மிகச் சிறப்பாக அமைந்தது. அந்த நூலின் உரையாசிரியர் பெருமையைப் பாராட்டி அவர் இன்னர் என்று தெரியவில்லையே என்று வருந்தினர். அந்த வருத்தம் ஒரு பாடலாக வெளிவந்தது.

  • பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப் பரணியின் பால்

ஆரும் சுவைபல ஆரும் தெளிய அணிஉரைசெய் சீரும் சிறப்பும் உடையோய், இருமொழிச் செல்வநின்றன் பேரும் தெரிந்திலன்; என்செய்கு வேன் இந்தப் பேதையனே! !

1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா நடந்தது. அப்போது கவர்னராக இருந்த மார்ஷ் பாங்ஸ் (Majory Banks) தலைமையில் அந்த விழா நடைபெற வேண்டுமென்று சங்கத்தின் காரியதரிசி டி. ஸி. சீநிவாச ஐயங்கார் விரும்பினர். அப்படியே ஏற்பாடும் செய்தார். தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களில் பிரமுகர் யாராவது ஒருவர் முதல் நாள் தலைமை தாங்குவார். இரண்டாவது நாள் அறிஞர்கள் கூட்டம் நடக்கும். அதற்கு ஆசிரியப்பெருமான் தலைமை தாங்குவது வழக்கம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். பல ஆராய்ச்சி உரைகாேப் புலவர் பெருமக்கள் நிகழ்த்தினர்கள். ஆசிரியப்பிரான் தலைமையில் அவற்றை நிகழ்த்துவதைத் தமக்கு அமைந்த பெருஞ் சிறப்பாக அவர்கள் கருதினர்கள்.

அந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க விழாவிற்குத் தலைமை தாங்க வந்த கவர்னர் மார்ஷ்பாங்ஸாக்கு ஒரு வரவேற்பு வாசித் தளிக்க டி. வி. சீநிவாசையங்கார் விரும்பினர். ஆசிரியப்பிரான் அந்த வரவேற்பைச் சந்தப்பாக்களால் அமைத்துக் கொடுக்க