பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 என் ஆசிரியப்பிரான்

வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டார். அப்படியே நான் அதைச் செய்தேன். தமிழ்ச்சங்க ஆண்டு விழாவிலும் நானே அந்த வரவேற்புப் பத்திரத்தைப் படித்தேன். சந்தத்தில் அமைந்திருந்த தல்ை யாவரும் கேட்டு மகிழ்ந்தார்கள்.

ஞானசம்பந்தப்பெருமான் சமணர்களைக் கழுவிலேற்றினர் என்று சில நூல்களில் இருக்கிறது. ஆனல் திரு ஆலவாயுடையார் திருவிளை யாடற் புராணத்தில் அவர்களே கழுவேறினர்கள் என்ற செய்தி இருக்கிறது. தக்கயாகப்பரணியிலும் ஓரிடத்தில் இது சம்பந்தமாக ஒரு கருத்து இருக்கிறது. ஞானசம்பந்தப்பெருமான் தோல்வியுற்ற சமணர்களைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் சைவ சமயத்தில் சேருங்கள் என்று அருளினர். சிலர் சேர்ந்தார்கள். ஆனல் பலர், 'வாதத்தில் நாங்கள் தோற்ருலும் எங்களுடைய சபதத்தில் தோல்வியடைய மாட்டோம் என்று அவர்களே கழுவேறினர்கள். ஞானசம்பந்தர் அவர்களைக் கழுவேற்றினர் என்று இல்லாமல், அவர் களே கழுவேறினர்கள் என்று அதில் இருந்தது. இந்தக் கருத்தை யொட்டி, அந்த விழாவில் என்னைப் பேசுமாறு ஆசிரியர் கட்டளே யிட்டார். அப்படியே அந்த ஆண்டு தமிழ்ச் சங்க விழாவில் இந்தக் கருத்தை வைத்து நான் ஒரு சொற்பொழிவு ஆற்றினேன். தக்க யாகப் பரணியில் உள்ள செய்திகளை எடுத்து விரிவாகச் சொன்னேன். ஆசிரியப்பெருமானுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. தம்மைச் சேர்ந்தவர்கள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதிலும், புகழ் பெற வேண்டும் என்பதிலும் அவர்களுக்கு மிக்க கருணை உண்டு என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆகையால் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம். ஏதேனும் சிறந்த காரியங்களைச் செய்யச் சொல்லி, பலரும் அதனைப் பாராட்டும்படி செய்வார். அத்தகைய அநுபவங்களை நான் பலகாலம் அநுபவித்திருக்கிறேன்.

1929-ஆம் ஆண்டு திரு எஸ். சுப்பராயன் தலைமையில் சென்னையில் மந்திரிசபை அமைந்தது. சுப்பராயன் ஆசிரியரிடம் கல்லூரியில் படித்தவர். அவர் ஒருநாள் தியாகராச விலாசத்திற்கு வந்து தம்மாலான உதவியை ஆசிரியப்பெருமானுக்குச் செய்யலாம் என்று சொன்னர், ஏதாவது தக்க வகையில் உதவி கிடைத்தால் தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிட அனுகூலமாக இருக்கும் என்ற காரணத்தினல் தாம் பதிப்பித்த பல புத்தகங்களை ஆசிரியப் பெருமான் அவரிடம் தந்தார். அதன்பிறகு சென்னையில் கோட்டைக்குச் சென்று முதல் மந்திரியாக இருந்த சுப்பராயனப் பார்த்தார். அவர் மிகவும் இனிமையாகப் பேசினர். ஆனல் அதற்குப் பின்பு எந்த வித அனுகூலமும் ஏற்படவில்லை. இப்படிப் பல