பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கயாகப்பரணிப் பதிப்பு 171.

பேர்களுடைய இனிமையான வார்த்தைகளைக் கேட்டுப் பல சமயங்களில் ஆசிரியப்பெருமான் ஏமாந்ததுண்டு.

பிள்ளையவர்கள் சரித்திரம் எழுத முயன்றது

ஆசிரியப்பெருமானுடைய ஆசிரியராகிய மீனட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென்ற எண்ணம் பல காலமாக ஆசிரியப்பெருமானுக்கு இருந்து வந்தது. அதல்ை அதற்குரிய குறிப்புக்களைக் குறித்துக்கொண்டு வந்தார். பிள்ளையவர்களிடம் தாம் பாடம் கேட்க வந்த காலத்திற்கு முன்புள்ள பகுதிகளை எல்லாம் பலரிடம் கேட்டுக் குறித்துத் தொகுத் திருந்தார். அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பாகமாகவும், தாம் அவரிடம் சேர்ந்து பாடம் கேட்டுப் பயன்பெற்ற காலத்தை மற்ருெரு பாகமாகவும் எழுத வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவ்வாறே பல குறிப்புக்களைத் தொகுத்து வந்தார். இதனை அறிந்து டி. வி. சீநிவாசையங்கார் அப்படிச் செய்வது மிகவும் நல்லதென்று கூறி ஊக்கம் அளித்தார். -