பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. மாளுக்கராகவும் இருக்கத் தெரிந்தவர்

பெங்களுர் ராமதாசர்

தக்கயாகப்பரணி வேலை நடந்து கொண்டிருந்த சமயம் பெங்களுருக்கு ஆசிரியர் ஒரு முறை போக வேண்டியிருந்தது. மைசூர்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பிரிவுக் குழுவில் ஆசிரியரும் உறுப்பினராக இருந்தார். அந்தக் கூட்டத்திற்குப் பெங்களுர் சென்றிருந்தார். அங்கே ஆசிரியப்பெருமானுக்கு வேண்டிய சுப்பிரமணிய சர்மா என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அவர் நல்ல தமிழறிவும், பக்தியும், மதியும் உடையவர். பூரீவித்யா உபாசகர். அவருடைய குருநாதர் பெங்களுரில் இருந்த ராமதாசர் என்பவர் தக்கயாகப்பரணியில் அம்பிகை சம்பந்தமான பல செய்திகள் வருகின்றன. எனவே ராமதாசரைச் சந்தித்துப் பேசினல் அம்பிகை யைப் பற்றிய பல செய்திகளுக்கு நல்ல விளக்கம் கிடைக்கக் கூடும் என்று எண்ணிஞர் ஆசிரியர். அதனால் பெங்களுர் போன போது தக்கயாகப்பரணிக் கையெழுத்துப்பிரதியைக் கையில் எடுத் துக் கொண்டு சென்ருர், நானும் உடன் சென்றேன்

ஒருநாள் சுப்பிரமணிய சர்மாவையும் அழைத்துக்கொண்டு ராமதாசரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவர் தமிழில் கொச்சையாகப் பேசினர். பெரும்பாலும் கன்னடத்திலேயே பேசி ஞர். சுப்பிரமணிய சர்மா உடனிருந்து மொழி பெயர்ப்பாளராக உதவி செய்தார். தக்கயாகப்பரணியில் அம்பிகையைப் பற்றி வரும் இடங்களை ஒவ்வொன்ருகச் சொல்லி ஆசிரியர் அவரிடம் விளக்கம் கேட்டார். ஆனல் அவரோ விஷயத்துக்குத் தொடர்பில்லாமல் தமக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொல்லத் தொடங்கினர். அவற்றைக் கேட்ட எனக்கு எரிச்சலாக இருந்தது. சிறந்த பெரும் புலவராகிய ஆசிரியப்பெருமான் ஏதோ சில விஷயங்களே தெரிந்த அவர் முன்னலே மாளுக்கரைப்போல இருந்து, அவர்கள் சொல்கிற எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளச் சொல் கிருரே என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது ராமதாசர் ஏதோ ஒன்று சொன்னர். நான் அது, அப்படி இல்லையே!' என்று குறுக்கே சொல்லிவிட்டேன். ஆசிரியப்பெருமான் சற்றுச் சினம் தோன்ற, ‘'நீ என்னுடன் தானே இருக்கிருய்? சொல்வதை எல்லாம்