பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இறுதி

கீழே விழுந்தது

1930- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் தியாகராச விலாசத்தின் மாடியில் படுத்திருந்த ஆசிரியர் விடியற்காலையில் எழுந்திருந்து கீழே இறங்கி வந்தார். மாடிப்படியின் அடியில் ஒரு கதவு உண்டு. அந்தக் கதவை அவர் திறந்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டார். காலில் நன்முக அடிபட்டுவிட்டது. அந்தப் பகுதி நன்ருக வீங்கிவிட்டது. பல காலமாகக் குடும்பத்துடன் பழகி வந்த டாக்டர் வைத்தியம் செய்தார். சீக்கிரத்தில் குணமாகவில்லை. கால் வீக்கமும், வலியும் அதிகமாக இருந்தன.

ஆசிரியர் காலில் வீக்கம் உண்டாகிப் படுத்த படுக்கையாக இருக்கிருர் என அறிந்து பல பெரியவர்கள் வந்து பார்த்தார்கள். பலர் அந்தச் செய்தி அறிந்து கடிதம் எழுதினர்கள். திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் வாரத்திற்கு ஒருமுறை காசி விசுவநாதருக்கு அருச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பும்படி செய்திருந் தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த சங்கங்களும், வேறு பலரும் ஆசிரியர் படுத்த படுக்கையாக இருப்பது தெரிந்து அங்கங்கேயுள்ள கோவில்களில் அருச்சனை செய்து பிரசாதங்களை அனுப்பினர்கள். -

ஒருநாள் வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது "'டாக்டர் ரங்காச்சாரியாரையக் கூப்பிடலாம்' என்று சொன் ஞர்கள்.

ரங்காச்சாரியார் ஆசிரியப்பெருமானிடம் மிகவும் அன்புடையவர். அவர் ஒரு நாள் வந்தார். வந்து வீட்டிலேயே சஸ்திர சிகிச்சை செய்தார். மிகவும் வேகமாக அந்தச் சிகிச்சை நடக்கும்போது நான் அருகில் இருந்து பார்த்தேன். இன்ன இடத்தில் இன்னதுதான் இருக்கும் என்கிற வரையறையோடு அவர் கை செயல்பட்ட விதம் மிகவும் வியப்பாக இருந்தது இரவும் பகலும் உறக்கம் இல்லாமல் ஆசிரியர் வருந்தினர். நான் அவரிடமே இருந்து வந்தேன். காலில் ரணம் ஆறிக்கொண்டு வந்தது.

ஆசிரியர் படுத்த படுக்கையாக இருந்தபோது அதிகமாக எதையும் படிக்கக்கூடாது என்று டாக்டர் சொன்னர். ஆனலும் ஆசிரியருக்குத் தமிழ்ப்பாடல் காதில் விழாவிட்டால் மூச்சே நின்று விடும். அவர் மகளுர் கல்யாணசுந்தரமையர் ஹைக்கோர்ட்டில்