பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 76 என் ஆசிரியப்பிரான்

வே&லயாக இருந்தார். அவர் ஹைக்கோர்ட்டிற்குப் போனபிறகு, இடைவேளையில் ஆசிரியர் ஏதாவது புத்தகத்தை எடுக்துப் படிக்கச் சொல்வார். ஆசிரியப் பிரானுடைய சிந்தனை பிள்ளையவர்கள் வரலாற்றிலேயே ஊன்றியிருந்தது. பலகாலம் குறித்து வைத் திருந்த குறிப்புக்களைத் தொகுத்து முன்பகுதிகளே எல்லாம் எழுதிவிட்டார். பிள்ளையவர்கள் வரலாற்றின் கடைசிப் பகுதி எஞ்சியிருந்தது.

படுத்த படுக்கையாக இருந்த ஆசிரியப்பிரானுக்குப் பிள்ளை யவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை முடிக்காமல் தம்முடைய வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற ஐயம் எழுந்திருக்க வேண்டும். அதை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும். என்ற பேரவா அவரை உந்தியது. ஆகவே ஒருநாள், அந்தக் கட்டை எடுத்துக் கொண்டுவா’ என்று சொன்னர். டாக்டர் ஒன்றும் செய்யக் கூடாது என்று சொன்னரே! “ என்றேன். டாக்டருக்கு என்ன தெரியும்? டாக்டர் என்ன கடவுளா? என் கடமையை நான் செய்வ தால் ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்' என்று சொன்னர். உடனே அந்தக் கட்டை நான் எடுத்து வந்தேன். படுக்கையிலிருந்து மெல்ல அருகில் இருந்த அறைக்குச் சென்ருர். அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பின்பு பிள்ளையவர்களுடைய இறுதிக் காலத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார்.

பிள்ளைய வர்களின் இறுதி நிலையைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார். திருவாவடுதுறைத் திருக்கோயிலில் எழுந் தருளியிருக்கும் கோமுத்தீசுவரரின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆசிரியர் மாளுக்கராக இருந்தார். அன்று ஐந்தாம் திருவிழா. தரிசனத்துக்காக ஆசிரியர் அங்கே சென்ருர். அப்போது அங்கே தரிசனம் செய்து கொண்டிருந்த ஆசிரியரை அழைத்து, :பிள்ளையவர்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது:” என்று மடாதிபதிகள் விசாரித்தார். * பிறர் பேசுவதை அறிந்து கொள்கிருர்கள். ஆனால் அவரால் பேச முடிய வில்லை. பேச முயன்றும்வார்த்தைகள் வெளி வருவதில்லை. நிலை கவலைக்கு இடமாகவே இருக்கிறது' என்று ஆசிரியர் சொன்னர். அதைக் கேட்ட தேசிகர் மனம் வருந்தியது. இந்த நிலையிலேனும் பிள்ளையவர்கள் இங்கே இருக்கிரு.ர்கள் என்று இருந்தால் மடத்துக்குக் கெளரவமாக இருக்கும். இறைவன் திருவுள்ளம் எப்படியோ?” என்று கண்கலங்கக் கூறி, ஆசிரியரை அவருடன் இருந்து கவனிக்கும்படி சொல்லி அனுப்பினர்.

ஆசிரியரும் அவருடன் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு வந்த சவேரிதாத பிள்ளே என்பவரும் பிள்ளையவர்களுக்கு அருகே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். சிறிது சிறிதாகப் பாலை