பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இறுதி 177

வாயில் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் வெளியே சென்று திருவீதியில் எழுந்தருளிய கோமுத்தீசுவரரைத் தரிசித்துத் தேங்காய், பழங்களே நிவேதனம் செய்தார். எப்படியாவது எங்கள் ஆசிரியரைக் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். பிறகு விபூதிப் பிரசாதத்தை வாங்கிச் சென்று பிள்ளையவர்களிடம் கொடுக்க அதை அவர் தரித்துக் கொண்டார். அதிலிருந்து அவருக்கு நினைவு இழக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

பிள்ளையவர்களுக்கு நினைவு தப்பியது. உடம்பில் துவட்சி உண்டாயிற்று. சவேரிநாதப்பிள்ளை அவரைத் தம்முடைய மார்பிற் சார்த்திப் பிடித்துக்கொண்டார். சில நேரம் வரையில் அவருக்குப் பிரக்ஞை இல்லை.

சிறிது நேரத்தின் பின் கண்ணே விழித்துப் பார்த்தார். நினைவு வந்தது போலத் தோன்றியது. 'திருவா” என்று அரை குறையான வார்த்தை அவர் வாயிலிருந்து வெளிப்பட்டது. திருவாசகத்தைப் படிக்க வேண்டும் என்ற குறிப்பையே அவர் வெளிப்படுத்துகிருர் என்று தெரிந்தது. உடனே ஆசிரியர் திருவாசகத்தை எடுத்து வந்து அடைக்கலப்பத்து’ என்ற பதிகத்தைப் படித்தார் பிள்ளையவர்கள் கண்ணே மூடிக் கொண்டே அதைக் கேட்டார். அவர் கண்களில் நீர்த்துளிகள் துளித்தன. அப்போது அவர் உடம்பில் ஒர் அசைவு உண்டாயிற்று. வலக்கண்ணே மட்டும் திறந்தார். அதுவே அவருடைய இறுதி மூச்சை விடும் காலம் என்பதை உடன் இருந்த இருவரும் அறிந்து கொண்டனர். அவர் உயிர் பிரிந்தது. அவருடைய மூச்சும் தமிழ்ப்புலமையும் அரும்பண்பு களும் முடிவுற்றன என்பதை அறிந்தனர். உடனே அவர் திருமேனியைப் படுக்கையில் கிடத்திவிட்டு உடனிருந்தவர்கள் புலம்பினர்கள்; வருந்தினர்கள்.

இதனை அறிந்த ஆதீன முதல்வராகிய சுப்பிரமணிய தேசிகருக்கு ஒன்றும் ஒடவில்லை. அவருடைய முகம் மலர்ச்சியை இழந்து வாட்டம் உற்றது. மறுநாட்காலையில் நடத்த வேண்டிய அபரக் கிரியைகளே நடத்தும்படி மடத்திலுள்ள பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். இதைப்பற்றி ஆசிரியர் எழுதுகிருர்:

'மற்றவர்களுக்கு நடக்கும் முறையிலும் செலவிலும் அதிகப்படி நடத்தி இவருடைய திவ்ய சரீரத்தை விபூதி ருத்திராட்சங்களால் அலங்கரித்து எடுப்பித்துக்கொண்டு செல்லத் தொடங்கியபொழுது, இவருடைய மாணுக்கர்களாகிய தம்பிரான் கள் மடத்து முகப்பில் வரிசையாக வந்து நின்று கண்ணிரை

3604-13