பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமம் பெற மறுத்தது - 7

பாண்டித்துரைத்தேவர் சொன்னவுடன், ஆசிரியர் ஒன்றும் புரியா மல், ஏதாவது புதிய நூலேப் பதிப்பிக்க உதவி செய்யப்போகிறீர் களா?' என்று கேட்டார். ஒரு நூல் அல்ல; பல நூல்களைத் தாங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குத் தங்களுக்குச் செல்வம் அளிக்கக்கூடியவாறு ஒரு கிராமத்தையே தங்கள் பெயரில் எழுதி வைக்க மகாராஜா நினைக்கிருர் என்ருர் பாண்டித்துரைத் தேவர், ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக" சொல்ல வேண்டும்' என்று கேட்டார்.

அப்போது பண்டித்துரைத்தேவர் சொன்னர்; நான் இன்று அரண்மனைச்குப் போயிருந்தேன். சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னர். எத்தனையோ பேர்களுக்கு நம்முடைய சம்ஸ்தானத்திலிருந்து நாம் உதவி செய்து வருகிருேம். ஆனல் அவர்களோ நமக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மாருக என்னுடைய தந்தையாரைப் பற்றியும், என்னைப் பற்றியும் எவ்வளவோ பழி சொல்கிறவர்களும் உண்டு. ஆனல் ஐயர் அவர்களோ நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நம்மிடத்தில் மிக்க அன்பைக் காட்டிவருகிருர்கள். இந்நாள்வரை அவர்களுக்கு நாம் எந்த விதமான உதவியும் செய்யாமல் இருந்தது பெரிய தவறு. ஆகவே, அவர்களுக்கு இப்போது நம் ஜமீனில் உள்ள ஒரு கிராமத்தையே வழங்கிவிடலாம் என்று தோன்றுகிறது. நான் நேராகச் சொன்னல் அவர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆகையால் அவர்களிடம் நெருங்கிப் பழகுகிற நீங்களே இந்தச் செய்தியை அவர்களிடம் சொல்லி, எப்படியாவது என்னுடைய விருப்பம் நிறைவேறும்படி செய்ய வேண்டும். அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதல்ை இதுபோன்ற கொடை யைத் தாம் வாங்கிக்கொள்வது சரியாகாது என்று நினைக்கலாம். அதுவே காரணமாக மறுக்கவும் மறுக்கலாம். அப்படியாளுல் அவருடைய குமாரர் பேரில் அந்தக் கிராமத்தை எழுதி வைத்துவிடு கிறேன். எப்படியாவது நம்மாலே ஒரு பெரிய உபகாரம் அந்தக் குடும்பத்திற்குச் சேரவேண்டும். இதை இரகசியமாக வைத்துக் கொண்டு, ஐயரது சம்மதத்தைப் பெற்று எனக்குத் தெரிவிப்பது நல்லது என்று சொன்னர். ஆகவே அதைத் தங்களிடம் தெரிவிக் கிறேன்' என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன் ஆசிரியருக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு கிராமத்தையே வாங்கிக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிருேம் ? நம் தொழி லுக்கும், சாகுபடி செய்வதற்கும், குத்தகை வாங்குவதற்கும் ஒத்து வருமா ? என்ருலும் இவ்வளவு பெரிய கொடையை வாங்கிக் கொள்வதற்கு நாம் என்ன செய்துவிட்டோம் ? நமக்கு என்ன தகுதி இருக்கிறது ?" என்றெல்லாம் எண்ணினர்.