பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 • என் ஆசிரியப்பிரான்

வீழ்த்திக் கொண்டு கலங்குவாராயினர். வடமொழி வித்துவான் களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து, தமிழ்க் காளிதாசா! தமிழ்க் காளிதாசா!' என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும் அயலூரிலிருந்து வந்திருந்த இவர் மானுக்கர் கூட்டத்திலிருந்தும், கவிச்சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே! எங்களுக்கு அரிய விஷயங்களே இனி யார் அன்புடன் சொல்வார்கள்? யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார்? என்ற ஒலியும், வேருெரு சாராரிடமிருந்து, குணக்கடலே! சாந்த சிரோமணி!" என்ற சப்தமும், பொதுவாக மற்ற யாவரிடத்தி லிருந்தும், ஐயா! ஐயா!' என்ற சப்த மும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக்கொண்டு போகையில், இனிமேல் திருவாசகத்திற்கு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிரு.ர்கள்?’ என்று என் தந்தையார் முதலிய பலர் சொல்லி மனம் உருகினர்கள்' என்

கண்ணிர் விட்டுக் கொண்டே சொன்னர். -

அவர் கூறியவற்றை நான் எழுதி வருகையில் நானும் கண்ணிர் விட்டுக் கொண்டே எழுதினேன். இதைக் கேட்கும் போதே இவ்வளவு துயரம் உண்டாகிறதே. அங்கே அப்போது இருந்தவர் ளுக்கு எப்படி இருந்திருக்கும்?' என்று எண்ணினேன். பிள்ளையவர் களின் இறுதிக் காலத்தைக் கூறும் அந்தப் பகுதியைப் பேனவில்ை எழுதியதாகத் தோன்றவில்லை. கண்ணிரினலேயே எழுதினேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆசிரியருடைய குரல் தழுதழுத் தது. அவர் கண்களில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஒரு வாறு அந்தப் பகுதி எழுதி முடிந்தது. - .

எப்படியோ பிள்ளையவர்களுடைய வரலாறு ஒருவாறு நிறை வெய்தியது. இறைவன் திருவருளால் அது இரண்டு பாகங்களாக வெளிவந்தது. முதற்பாகம் 1933-ஆம் ஆண்டிலும், இரண்டாவது பாகம் 1934-ஆம் ஆண்டிலும் வெளியாயின. அவற்றைப் படித்தவர்களெல்லாம் பிள்ளையவர்களுடைய பெருமையையும் ஆசிரியப் பெருமானுடைய குரு பக்தியையும் நன்கு அறிந்து கொண்டார்கள்.

ஆசிரியர் பிள்ளையவர்களைப் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் பெயர் சொல்லிக் குறிப்பிடமாட்டார். அவருடைய வரலாற்றிலும், பிள்ளையவர்கள், கவிஞர் பிரான், புலவர் பிரான்: என்று எழுதினரேயன்றி, மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று எழுத வில்லை. ஆனல் அவருடைய இளம் பருவத்தைப்பற்றி எழுதும் போது மட்டும், "மீளுட்சிசுந்தரம் பிள்ளை ஐந்து பிராயம் அடைந்த