பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இறுதி 179

வுடன் சிதம்பரம் பிள்ளை (பிள்ளையவர்களின் தந்தையார்) இவருக்கு வித்தியாரம்பம் செய்வித்துத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினர்' என்று எழுதினர். அங்கே உடுக் குறியிட்டு அடிக் குறிப்பில், பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்து எழுதுவதற்கு அஞ்சுகின்றேன்' என்று எழுதியிருக்கிரு.ர்." ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது: கச்சியப்ப முனிவர் பல நூல்களைச் செய்திருக்கிரு.ர். காஞ்சீபுரத்தில் ஆனந்த ருத்திரேசர் ஆலயத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைப் பற்றிச் சில பிரபந்தங்களை அவர் இயற்றி யுள்ளார். அவற்றில் ஒன்று வண்டுவிடு தூது. கச்சியப்பர் சங்க நூல்களை நன்ருக அறிந்தவர். அவற்றிலுள்ள பிரயோகங்களையும் நன்கு தெரிந்தவர். அவருடைய நூல்களில் ஏராளமான கருத்துக்கள் அமைந்திருக்கும். அவர் எழுதிய ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது என்னும் நூலை நல்ல முறையில் பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியப்பெருமான் விரும்பினர். காஞ்சீபுரம் சம்பந்தமான அதில் காஞ்சிப் புராணத்திலுள்ள வரலாறு சுருக்கமாக அமைந்திருக் கிறது. அதற்குக் குறிப்புரை எழுதும்போது காஞ்சிப் புராணத்தி லிருந்து பல மேற்கோள்களே எடுத்துக் காட்டினர். அந்த நூல் மிகச் சிறப்பான முறையில் வெளியாயிற்று.

1931-ஆம் ஆண்டு எஜுகேஷனல் ரிவ்யூ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் டி. எஸ். கோதண்டராமையர் ஒரு கட்டுரை ஆசிரியப் பிரானைப் பற்றி எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் சுவாமிமலைச் சுவாமிநாதன் மீது பாடிய பாடல்களில் சிலவற்றை வெளியிட்டார். - - * மலர்கொண் டுனையே வழிபட் டொருவேன்

அலர்கொண் டுவிளங் கலைவா விகள் சூழ் கலர்கண் டறியாக் கவினே ரக எற் பலர்கண் டிகழும் படிவைத் ததெனே. ததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம் பதையா துறையும் படிவைத் தருள்வாய் உதயா தியனே ரொளியாய் அளியாய் சிதையா துறையுந் திருவே ரகனே.”

  • மீனட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் முதலாம் பாகம். பக்கம் 9.

+ திருமயிலைத் திரிபந்தாதியும், வண்டுவிடு தூதும் திருவா வடுதுறை ஆதீனத்தலைவரின் உதவியில்ை 1931-ஆண்டு வெளி யாயின.