பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. டி. லிட். பட்டம் பெற்றது

சென்னப்பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பெருமானுக்கு டி.லிட். பட்டம் கொடுக்க வேண்டுமென்றும், சி.வி. இராமனுக்கும் அப்படி ஒரு பட்டம் கொடுக்க வேண்டுமென்றும் ஏற்பாடாகியிருந்தது. அவ்வாறே வேறு பலருக்கும் இந்த டாக்டர் பட்டங்களைக் கொடுக்கத்தீர்மானம் ஆயிற்று.

அந்தக் காலத்தில் செனட் அங்கத்தினராக இருந்த பெட்ராம் பாதிரியார் ஒரு கடிதம் எழுதினர். 'டாக்டர் பட்டத்தை இப்படி எல்லோருக்கும் வழங்கப் போனல் அதன் மதிப்புக் குறைந்துவிடும்: உண்மையாக நாட்டிற்குப் பல முறையில் பயன்படக் கூடிய பணிகளைச் செய்தவர்களுக்கே கொடுப்பது சிறந்தது. ஸ்ர் சி.வி. ராமனுக்கும், மகாமகோபாத்தியாய ஐயர் அவர்களுக்கும் பட்டம் கொடுத்தால் போதும்” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனல் பல்கலைக் கழகத்தார் பலருக்கும் இந்தப் பட்டத்தை அப்போது வழங்கினர்கள். 1932-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21-ஆம் தேதி இந்தப் பட்டம் கிடைத்தது.

டாக்டர் பட்டத்தைப் பெறும்போது அதற்கென்று அமைந்த ஒருவகை உடையை அணிந்து கொள்ள வேண்டும். இது சம்பந்த மாக அந்தப் பட்டத்தை அப்போது பெற இருந்த ஸ்ர். பி.எஸ். சிவசாமி ஐயர் ஆசிரியர் அவர்களுக்கும் வேண்டிய உடைகளைத் தைக்கும்படி ஏற்பாடு செய்தார். 3-8-1982 அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்தப் பட்டத்தைப் பெறும்போது மிகச் சுருக்கமாக ஆசிரியப்பெருமான் பேசினர்.

சமகாமேன்மை தங்கிய சென்னைச் சர்வகலாசாலை அத்திய கrரவர்கள் சமூகத்திற்கு விஞ்ஞாபனம்: சகல கலைகளுக்கும் இருப் பிடமாகிய இந்த இடத்தில் பல்வேறு துறைகளில் சிறப்புற்று விளங்கும் மகாமேதாவிகள் முன்னிலையில் இந்தக் கெளரவப் பட்டத்துக்குரிய சின்னத்தைத் தங்களுடைய திருக்கரத்திலிருந்து பெற்றதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னைப் பாராட்டிப் பேசிய தங்களுக்கும், இதற்குக் காரணமாயிருந்த கனவான்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.

'இந்தப் பட்டத்தைப் பெறுவதற்குரிய தகுதி என்னிடம் இல்லா விட்டாலும் இதுவரையில் ஏற்படாத இந்தக் கெளரவம்