பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{32 என் ஆசிரியப்பிரான்

தமிழ்ப் பாஷைக்கே கிடைத்திருக்கிறது என்பது என்னுடைய அந்த ரங்கமான அபிப்பிராயம்’.

ஆசிரியப்பெருமானப் பற்றி அப்போது பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ரீராமுண்ணி மேனன் பல படியாகப் பாராட்டினர்.

பத்திரிகைகளில் பிரபந்தங்கள்

பல வகையான சிறிய பிரபந்தங்களை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. தம்முடைய சொந்த முயற்சி யால் சிலவற்றை வெளியிட்டார். பணச் செலவு அதிகமாயிற்று. அதனுல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் வெளிவந்த செந் தமிழ்ப் பத்திரிகையின் பின்னல் அனுபந்தமாகச் சில நூல்களை வெளியிடலாம் என்ற எ ண் ண ம் உண்டாயிற்று. அந்த எண்ணத்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளரிடம் சொன்னவுடன் அவரும் அந்தக் கருத்தை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டார். அதன்படி பழனிப் பிள்ளைத் தமிழ் செந்தமிழில் பகுதி பகுதியாகச் சில ஆண்டுகள் வெளிவந்தது. வேறு சில நூல்களும் வெளியாயின.

செந்தமிழில் சில பிரபந்தங்கள் வெளிவருவது கண்டு அக் காலத்தில் சிவநேசன்" என்ற பத்திரிகையை நடத்திவந்த பலவான் குடி இராமசுவாமி செட்டியார் தம்முடைய பத்திரிகையிலும் ஏதேனும் பிரபந்தத்தை வெளியிடலாம் என்ற கருத்தைத் தெரி வித்தார். அப்படியே பழமலைக் கோவை, திருமயிலை யமக வந்தாதி ஆகிய பிரபந்தங்கள் அந்தப் பத்திரிகையில் வெளியாயின.

கலைமகளுக்குக் கட்டுரைகள்

சென்னை மயிலாப்பூரிலுள்ள லா ஜர்னல் அதிபர் பூரீமான் நாராயணசுவாமி ஐயர் அவர்கள் தம்முடைய உறவினர் திரு இராமச்சந்திர ஐயருடன் 1931-ஆம் வருடம் டிசம்பர் மாதத் தில் ஒருநாள் ஆசிரியப்பெருமானிடம் வந்தார். 1932-இல் ஜனவரி மாதத்திலிருந்து கலைமகள்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கு ஆசிரியப்பெருமான் கட்டுரை எழுதினல் பத்திரிகையின் மதிப்பு அதிகமாகும் என்றும் இருவரும் கேட்டுக்கொண்டார்கள். அப்படியே கலைகள்' என்ற கட்டுரையை ஆசிரியர் எழுதித் தந்தார். அது கலைமகள் முதல் இதழில். வெளியாயிற்று.

அந்தப் பத்திரிகைக்கு உதவி செய்ய யாரேனும் இருந்தால் சொல்ல வேண்டுமென்று ஆசிரியரிடம் கேட்டார்கள். என்னிடம்